ஆறே வழிகளைப் பின்பற்றினால் ஆரோக்கிய வாழ்வு நம் கையில் http://ift.tt/1APZLZa     மனம் புத்துணர்வோடு இல்லை எனில், எந்தச் செயலையும் உற்சாகத்துடன் செய்ய முடியாது.  நிம்மதியைத் தேடி அலையவோ, மனநல நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை பெறவோ அவசியமே இல்லை. ஆறே வழிகளைப் பின்பற்றினால் ஆரோக்கிய வாழ்வு நம் கையில்… இந்த ஆறு வழிகளையும் குறித்து வைத்துக் கொண்டு அதன்படி செயல்பட்டால், விரைவிலேயே நிம்மதிக்கான மாற்றத்தை நிச்சயம் நம்மால் உணர முடியும். 1. தினமும் அரை மணி நேரம் உலாவுங்கள் வீடு, ஆபீஸ் என எல்லா இடங்களிலும் டென்ஷனோடு இருக்கிறீர்களா? முதலில் நான்கு சுவற்றுக்குள் இருந்து வெளியே வாருங்கள். வசிக்கும் இடத்திற்கு அருகில் ஏதேனும் ஒரு பகுதிக்கு நடந்து செல்லுங்கள். அந்தப் பகுதி மக்கள் என்னென்ன செய்கிறார்கள், என்னென்ன மாற்றங்கள் நடந்து இருக்கிறது என்பது கூர்ந்து கவனியுங்கள்.  இதே போல தினமும் உங்கள் வீட்டைச் சுற்றி ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று வாருங்கள். ‘தலைக்கு மேல வீட்டு வேலை இருக்கிறது, ஆபீஸ் டென்ஷன் இதுக்கெல்லாம் எங்க நேரம்?” என்று சலித்துகொள்ளாமல் தினமும் அரை மணி நேரம் உலாவுவதன் மூலம் உற்சாக மனநிலையைப் பெறுவது உறுதி.2. ரசித்து ருசித்துச் சாப்பிடுங்கள் வாழ்க்கை என்பது ரசனை மிகுந்தது. ஒவ்வொரு வேலையும் ரசித்துச் செய்பவர்களுக்கு எப்போதுமே வெற்றி தான், உணவு சாப்பிடுவதுகூடச் சுவைக்கும், ருசிக்குமாகத்தான் இருக்கிறது. வீட்டில் புதிது புதிதாக, ஏதாவதொரு டிஷ் செய்து, உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து ரசித்து ருசித்துச் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவு எங்கிருந்து வருகிறது, எப்படி வந்தது, சமைத்த பின் உணவு எப்படி மாறுகிறது, அந்த உணவை சாப்பிடுவதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதையெல்லாம் அறிந்து கொள்ளுங்கள். தினமும் சாப்பிடுவதற்கு என்று குறிப்பிட்ட நேரம் செலவழியுங்கள். சாப்பிடும் உணவு பிடித்து இருந்தால்,  மனம் விட்டுச் சமைத்தவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் குழந்தைகளை கூடச் சமையலுக்கு உதவ வையுங்கள். வீட்டு விசேஷங்களின்போது, உங்கள் கையால் சமைத்த உணவை, ஆதரவற்றவர்களுக்கு வழங்குங்கள்.  அதிலும் ஒரு ஆனந்தம் இருப்பது உங்களுக்குப் புரியும்.3. உங்கள் குறிக்கோளை எழுதுங்கள் ஒரு டைரி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்வில் என்னவாக வேண்டும், எப்படிப்பட்ட பார்ட்னர் அமையவேண்டும், உங்கள் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும், வருங்காலத்தில் உங்கள் பெற்றோரை என்ன செய்யப் போகிறீர்கள், இந்த உலகத்தில் நீங்கள் எங்கெல்லாம் செல்ல விரும்புகிறீர்கள் என மனதில் தோன்றியதையெல்லாம் அதில் எழுதுங்கள். உங்கள் ஆசைகள், இலக்குகள், கனவுகள் அனைத்தையும் கட்டாயம் எழுதுங்கள். உங்கள் மரணத்தின் வரை நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் என்பதுவரை நன்றாக யோசித்து விரிவாக எழுதுங்கள். பிறகு அன்று முதல் அடுத்த வருடத்துக்குள் என்ன செய்யபோகிறீர்கள், ஒரு மாதத்தில், ஒரு வாரத்தில் என்னென்ன செய்யப் போகிறீர்கள் எனப் பட்டியலிடுங்கள். பிறகு அந்தப் பட்டியலில் உள்ளவற்றை ஒவ்வொன்றாகச் செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் இலக்கு என்பது என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த இலக்கை அடைய என்னென்ன வழிகள் இருக்கிறது, எந்த வழி சிறந்தது, என்னென்ன பிரச்னைகள் வரக்கூடும், அதை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள் என்பதற்கான கேள்விகளையும் பதில்களையும் நீங்களே எழுதுங்கள். அதன் பிறகு உங்கள் இலக்கை துரத்துவது எளிதாக இருக்கும்.4. ஓய்வெடுங்கள் ஒரு மனிதன் ஓய்வில் இருக்கும் காலம்தான் மிக முக்கியமானது. ஓய்வு என்பது புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது. ஒவ்வொரு நாளும் மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு தேவை. விளையாட்டோ, வரலாறோ, சினிமா கிசு கிசுவோ உங்களுக்கு எது பிடிக்கிறதோ அவற்றை முதலில் படியுங்கள். அதேசமயம் உங்கள் இலக்கை அடைவதற்கும், பொது அறிவுக்கும் தினமும் அரை மணிநேரம் ஒதுக்கி படியுங்கள். ராஜாவின் இசையோ, ரகுமானின் இசையோ எது உங்களை மறக்க செய்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறதோ அந்த இசையைக் கேளுங்கள். டிவியில் நகைச்சுவை காட்சிகள், கார்ட்டூன்கள் பாருங்கள். சீரியசான விஷயங்களைச் செய்யாமல் மனதை ரிலாக்ஸ் செய்வதற்குத்தான் ஓய்வு என்பதை உணர்ந்து ஓய்வெடுங்கள். 5. உடற்பயிற்சி, யோகா அவசியம் கடைபிடியுங்கள் மன அமைதிக்கு உடற்பயிற்சி இன்றியைமையாதது. உங்கள் உடலை நீங்கள் நேசிக்கத் தொடங்கினால், உங்கள் உடல் அழகாகத் தோன்ற நீங்கள் மெனக்கெட ஆரம்பிப்பீர்கள். தினமும் அரை மணிநேரம் நடை பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள். பிறகு 15 நிமிடம் யோகா செய்யுங்கள், தியானம், யோகா போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும் மந்திரம் என்பதை மறந்து விடாதீர்கள்.6. மற்றவருக்கு உதவுங்கள்!ஒரு ஓட்டலுக்குச் செல்கிறீர்கள். 1000 ரூபாய்க்குச் சாப்பிடுகிறீர்கள். நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு அரசாங்கத்துக்கு வரி கட்டுகிறீர்கள். ஆனால் உண்ங்களை விழுந்து விழுந்து கவனிக்கும் சர்வருக்கு ஐந்து ருபாய் கொடுக்கக் கூட உங்களுக்கு மனம் வரவில்லை. அது சரியா, தவறா என யோசியுங்கள். உங்கள் பணத்தில் மாதாமாதம் யாருக்கேனும் உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், எங்கேயோ ஒரு முதியவர், ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி உங்கள் மனதை உலுக்கினால் அப்படியே கடந்து செல்லாதீர்கள். குறைந்தபட்சம் அவரை ஒரு டீக்கடைக்காவது அழைத்துச் சென்று அவ ருக்கு பிடித்த உணவுப்பொருள் ஒன்றை வாங்கித் தந்து அவர்கள் சாப்பி டுவதை நின்று கவனியுங்கள். உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் அதை நீங்கள் உணரும் பட்சத்தில் உங்கள் வாழ்வின் அர்த்தம் உங்களுக்குப் புரியும். – பு.விவேக் ஆனந்த்

    மனம் புத்துணர்வோடு இல்லை எனில், எந்தச் செயலையும் உற்சாகத்துடன் செய்ய முடியாது.  நிம்மதியைத் தேடி அலையவோ, மனநல நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை பெறவோ அவசியமே இல்லை. ஆறே வழிகளைப் பின்பற்றினால் ஆரோக்கிய வாழ்வு நம் கையில்…

இந்த ஆறு வழிகளையும் குறித்து வைத்துக் கொண்டு அதன்படி செயல்பட்டால், விரைவிலேயே நிம்மதிக்கான மாற்றத்தை நிச்சயம் நம்மால் உணர முடியும்.
1. தினமும் அரை மணி நேரம் உலாவுங்கள்

வீடு, ஆபீஸ் என எல்லா இடங்களிலும் டென்ஷனோடு இருக்கிறீர்களா? முதலில் நான்கு சுவற்றுக்குள் இருந்து வெளியே வாருங்கள். வசிக்கும் இடத்திற்கு அருகில் ஏதேனும் ஒரு பகுதிக்கு நடந்து செல்லுங்கள். அந்தப் பகுதி மக்கள் என்னென்ன செய்கிறார்கள், என்னென்ன மாற்றங்கள் நடந்து இருக்கிறது என்பது கூர்ந்து கவனியுங்கள். 

இதே போல தினமும் உங்கள் வீட்டைச் சுற்றி ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று வாருங்கள். ‘தலைக்கு மேல வீட்டு வேலை இருக்கிறது, ஆபீஸ் டென்ஷன் இதுக்கெல்லாம் எங்க நேரம்?” என்று சலித்துகொள்ளாமல் தினமும் அரை மணி நேரம் உலாவுவதன் மூலம் உற்சாக மனநிலையைப் பெறுவது உறுதி.

2. ரசித்து ருசித்துச் சாப்பிடுங்கள்

வாழ்க்கை என்பது ரசனை மிகுந்தது. ஒவ்வொரு வேலையும் ரசித்துச் செய்பவர்களுக்கு எப்போதுமே வெற்றி தான், உணவு சாப்பிடுவதுகூடச் சுவைக்கும், ருசிக்குமாகத்தான் இருக்கிறது. வீட்டில் புதிது புதிதாக, ஏதாவதொரு டிஷ் செய்து, உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து ரசித்து ருசித்துச் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவு எங்கிருந்து வருகிறது, எப்படி வந்தது, சமைத்த பின் உணவு எப்படி மாறுகிறது, அந்த உணவை சாப்பிடுவதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதையெல்லாம் அறிந்து கொள்ளுங்கள். தினமும் சாப்பிடுவதற்கு என்று குறிப்பிட்ட நேரம் செலவழியுங்கள்.

சாப்பிடும் உணவு பிடித்து இருந்தால்,  மனம் விட்டுச் சமைத்தவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் குழந்தைகளை கூடச் சமையலுக்கு உதவ வையுங்கள். வீட்டு விசேஷங்களின்போது, உங்கள் கையால் சமைத்த உணவை, ஆதரவற்றவர்களுக்கு வழங்குங்கள்.  அதிலும் ஒரு ஆனந்தம் இருப்பது உங்களுக்குப் புரியும்.

3. உங்கள் குறிக்கோளை எழுதுங்கள்

ஒரு டைரி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்வில் என்னவாக வேண்டும், எப்படிப்பட்ட பார்ட்னர் அமையவேண்டும், உங்கள் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும், வருங்காலத்தில் உங்கள் பெற்றோரை என்ன செய்யப் போகிறீர்கள், இந்த உலகத்தில் நீங்கள் எங்கெல்லாம் செல்ல விரும்புகிறீர்கள் என மனதில் தோன்றியதையெல்லாம் அதில் எழுதுங்கள். உங்கள் ஆசைகள், இலக்குகள், கனவுகள் அனைத்தையும் கட்டாயம் எழுதுங்கள்.

உங்கள் மரணத்தின் வரை நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் என்பதுவரை நன்றாக யோசித்து விரிவாக எழுதுங்கள். பிறகு அன்று முதல் அடுத்த வருடத்துக்குள் என்ன செய்யபோகிறீர்கள், ஒரு மாதத்தில், ஒரு வாரத்தில் என்னென்ன செய்யப் போகிறீர்கள் எனப் பட்டியலிடுங்கள். பிறகு அந்தப் பட்டியலில் உள்ளவற்றை ஒவ்வொன்றாகச் செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் இலக்கு என்பது என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த இலக்கை அடைய என்னென்ன வழிகள் இருக்கிறது, எந்த வழி சிறந்தது, என்னென்ன பிரச்னைகள் வரக்கூடும், அதை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள் என்பதற்கான கேள்விகளையும் பதில்களையும் நீங்களே எழுதுங்கள். அதன் பிறகு உங்கள் இலக்கை துரத்துவது எளிதாக இருக்கும்.

4. ஓய்வெடுங்கள்

ஒரு மனிதன் ஓய்வில் இருக்கும் காலம்தான் மிக முக்கியமானது. ஓய்வு என்பது புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது. ஒவ்வொரு நாளும் மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு தேவை. விளையாட்டோ, வரலாறோ, சினிமா கிசு கிசுவோ உங்களுக்கு எது பிடிக்கிறதோ அவற்றை முதலில் படியுங்கள். அதேசமயம் உங்கள் இலக்கை அடைவதற்கும், பொது அறிவுக்கும் தினமும் அரை மணிநேரம் ஒதுக்கி படியுங்கள்.

ராஜாவின் இசையோ, ரகுமானின் இசையோ எது உங்களை மறக்க செய்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறதோ அந்த இசையைக் கேளுங்கள். டிவியில் நகைச்சுவை காட்சிகள், கார்ட்டூன்கள் பாருங்கள். சீரியசான விஷயங்களைச் செய்யாமல் மனதை ரிலாக்ஸ் செய்வதற்குத்தான் ஓய்வு என்பதை உணர்ந்து ஓய்வெடுங்கள்.

5. உடற்பயிற்சி, யோகா அவசியம் கடைபிடியுங்கள்

மன அமைதிக்கு உடற்பயிற்சி இன்றியைமையாதது. உங்கள் உடலை நீங்கள் நேசிக்கத் தொடங்கினால், உங்கள் உடல் அழகாகத் தோன்ற நீங்கள் மெனக்கெட ஆரம்பிப்பீர்கள். தினமும் அரை மணிநேரம் நடை பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள். பிறகு 15 நிமிடம் யோகா செய்யுங்கள், தியானம், யோகா போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும் மந்திரம் என்பதை மறந்து விடாதீர்கள்.

6. மற்றவருக்கு உதவுங்கள்!

ஒரு ஓட்டலுக்குச் செல்கிறீர்கள். 1000 ரூபாய்க்குச் சாப்பிடுகிறீர்கள். நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு அரசாங்கத்துக்கு வரி கட்டுகிறீர்கள். ஆனால் உண்ங்களை விழுந்து விழுந்து கவனிக்கும் சர்வருக்கு ஐந்து ருபாய் கொடுக்கக் கூட உங்களுக்கு மனம் வரவில்லை. அது சரியா, தவறா என யோசியுங்கள்.

உங்கள் பணத்தில் மாதாமாதம் யாருக்கேனும் உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், எங்கேயோ ஒரு முதியவர், ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி உங்கள் மனதை உலுக்கினால் அப்படியே கடந்து செல்லாதீர்கள்.

குறைந்தபட்சம் அவரை ஒரு டீக்கடைக்காவது அழைத்துச் சென்று அவ ருக்கு பிடித்த உணவுப்பொருள் ஒன்றை வாங்கித் தந்து அவர்கள் சாப்பி டுவதை நின்று கவனியுங்கள். உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் அதை நீங்கள் உணரும் பட்சத்தில் உங்கள் வாழ்வின் அர்த்தம் உங்களுக்குப் புரியும்.

– பு.விவேக் ஆனந்த்

from Blogger http://ift.tt/1APZNQO
via IFTTT

Leave a comment