வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய http://ift.tt/1Ayru2a   நமச்சிவாய வாழ்க மரணம் அடைந்தவரின் ஆன்மா எங்கே செல்வதென்று அலையும்போது, அந்த ஆன்மாவுக்கு வழிகாட்டுபவன் யார் தெரியுமா????? துக்கவீட்டில் “சங்கு” ஊதுபவன்தான். வீட்டினை சுத்தம் செய்ய உதவும் துடைப்பம், ஒட்டடைகம்பு, நம் பாதத்தை காக்கும் செருப்பு ஆகியவற்றை வீட்டின் முலையில் வைப்பதுபோலத்தான், நம் ஆன்மாவுக்கு ஈசனடி செல்ல வழிகாட்டும் சங்கு ஊதுபவனையும் ஒதுக்கி ஓரமாக வைத்திருக்கிறோம். பணம் இல்லாத நேரத்தில், பணம் கிடைத்தால்தான் சந்தோசம். பொருள் இல்லாத நேரத்தில், பொருள் கிடைத்தால்தான் சந்தோசம். பசிக்கும் நேரத்தில், சோறு கிடைத்தால்தான் சந்தோசம். அதே போல், உடலைவிட்டு பிறிந்த உயிருக்கு சிவபெருமானை சென்றடையும் வழிதெரிந்தால்தான் அந்த ஆன்மாவுக்கு சந்தோசம். அந்த வழி எப்படி ஒரு ஆன்மாவுக்கு தெரியுமென்றால், சங்குநாதம்தான் அந்த வழியை அறியச்செய்யும். சங்கொலி கேட்குமிடமெல்லாம் சிவபெருமான் வாழுமிடம். சங்கு முழக்கம் கேட்கும்போது, நம் மனம் எதையும் அச்சமையம் சிந்திக்காமல் ஒருநிலைபடும். அந்த ஒருநிலைதான் சிவநிலை. சங்கொலி கேட்டு பழகிய ஒருவனின் ஆன்மாவுக்குத்தான், இறந்தபின்னர் சங்கொலி கேட்கையில் சிவசிந்தனை எழும். அவ்வாறு சிவசிந்தனை எழுகையில் ஆன்மாவானது அங்குமிங்கும் அலையாமல் ஒருநிலைபடும். ஒருநிலை என்னும் சிவநிலைக்கு சென்ற ஆன்மாவை, சிவபெருமான் தாமாகவே முன்வந்து அவரோடு சேர்த்துக்கொள்வார். சங்குநாதம் ஒவ்வொரு இல்லத்திலும் கேட்கவேண்டிய நாதம். வீட்டிலுள்ளவர்கள் அனுதினமும் சங்கொலியை கேட்டு பழகவேண்டும். சிரியவர்முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிவநிலையில் ஆழ்த்தவல்ல சங்கினை வாங்கி அனைவரும் வீட்டில் தினமும் முழங்குங்கள். என்னிடம் சங்கு இல்லை. ஆனால் வாங்கிவிடுவேன். எம் குடும்த்தார் அனைவரின் மனதையும் ஒருநிலை படுத்துவேன். எம்மோடு சேர்ந்த அனைவரையும் சிவசிந்தனையில் ஆழ்த்துவேன். இறந்தபின்னர் ஒவ்வொருவரையும் சிவனடி சேரச்செய்வேன். இந்த பாக்கியத்தை சிவபெருமான் நிச்சயம் எமக்கு செய்தருள்வார் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறேன். இத்தகைய வாழ்வும் வழிபாடுதான். வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய

 

நமச்சிவாய வாழ்க
மரணம் அடைந்தவரின் ஆன்மா எங்கே செல்வதென்று அலையும்போது, அந்த ஆன்மாவுக்கு வழிகாட்டுபவன் யார் தெரியுமா?????
துக்கவீட்டில் “சங்கு” ஊதுபவன்தான்.
வீட்டினை சுத்தம் செய்ய உதவும் துடைப்பம், ஒட்டடைகம்பு, நம் பாதத்தை காக்கும் செருப்பு ஆகியவற்றை வீட்டின் முலையில் வைப்பதுபோலத்தான், நம் ஆன்மாவுக்கு ஈசனடி செல்ல வழிகாட்டும் சங்கு ஊதுபவனையும் ஒதுக்கி ஓரமாக வைத்திருக்கிறோம்.
பணம் இல்லாத நேரத்தில், பணம் கிடைத்தால்தான் சந்தோசம்.
பொருள் இல்லாத நேரத்தில், பொருள் கிடைத்தால்தான் சந்தோசம்.
பசிக்கும் நேரத்தில், சோறு கிடைத்தால்தான் சந்தோசம்.
அதே போல், உடலைவிட்டு பிறிந்த உயிருக்கு சிவபெருமானை சென்றடையும் வழிதெரிந்தால்தான் அந்த ஆன்மாவுக்கு சந்தோசம்.
அந்த வழி எப்படி ஒரு ஆன்மாவுக்கு தெரியுமென்றால், சங்குநாதம்தான் அந்த வழியை அறியச்செய்யும்.
சங்கொலி கேட்குமிடமெல்லாம் சிவபெருமான் வாழுமிடம். சங்கு முழக்கம் கேட்கும்போது, நம் மனம் எதையும் அச்சமையம் சிந்திக்காமல் ஒருநிலைபடும். அந்த ஒருநிலைதான் சிவநிலை.

சங்கொலி கேட்டு பழகிய ஒருவனின் ஆன்மாவுக்குத்தான், இறந்தபின்னர் சங்கொலி கேட்கையில் சிவசிந்தனை எழும். அவ்வாறு சிவசிந்தனை எழுகையில் ஆன்மாவானது அங்குமிங்கும் அலையாமல் ஒருநிலைபடும். ஒருநிலை என்னும் சிவநிலைக்கு சென்ற ஆன்மாவை, சிவபெருமான் தாமாகவே முன்வந்து அவரோடு சேர்த்துக்கொள்வார்.

சங்குநாதம் ஒவ்வொரு இல்லத்திலும் கேட்கவேண்டிய நாதம். வீட்டிலுள்ளவர்கள் அனுதினமும் சங்கொலியை கேட்டு பழகவேண்டும்.
சிரியவர்முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிவநிலையில் ஆழ்த்தவல்ல சங்கினை வாங்கி அனைவரும் வீட்டில் தினமும் முழங்குங்கள்.

என்னிடம் சங்கு இல்லை. ஆனால் வாங்கிவிடுவேன். எம் குடும்த்தார் அனைவரின் மனதையும் ஒருநிலை படுத்துவேன். எம்மோடு சேர்ந்த அனைவரையும் சிவசிந்தனையில் ஆழ்த்துவேன். இறந்தபின்னர் ஒவ்வொருவரையும் சிவனடி சேரச்செய்வேன்.

இந்த பாக்கியத்தை சிவபெருமான் நிச்சயம் எமக்கு செய்தருள்வார் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறேன். இத்தகைய வாழ்வும் வழிபாடுதான்.

வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய

from Blogger http://ift.tt/1AyrrUg
via IFTTT

தேங்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? http://ift.tt/1Ayrr6K   பரீட்சையில் பாஸானால் பிள்ளையாருக்கு உடைக்கப்படும் தேங்காய்கள் அன்றாட சமையலிலும் தவறாமல் இடம்பிடிக்கிறது. இளநீர் மற்றும் தேங்காய்களில் இருக்கும் நன்மைகளை இந்த கட்டுரை மிகத்தெளிவாகவே எடுத்துரைக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு தேங்காய்கள் எவ்வளவு நல்லது என்பது முழுமையாகப் புரிகிறது இதன்மூலம்.  தொடர்ந்து படியுங்கள்!  தேங்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? #‎Coconut‬ ‪#‎Health‬ ‪#‎Food‬

தேங்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?, Thaengai saapittaal ivvalavu nanmaigala? 

பரீட்சையில் பாஸானால் பிள்ளையாருக்கு உடைக்கப்படும் தேங்காய்கள் அன்றாட சமையலிலும் தவறாமல் இடம்பிடிக்கிறது. இளநீர் மற்றும் தேங்காய்களில் இருக்கும் நன்மைகளை இந்த கட்டுரை மிகத்தெளிவாகவே எடுத்துரைக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு தேங்காய்கள் எவ்வளவு நல்லது என்பது முழுமையாகப் புரிகிறது இதன்மூலம். 
தொடர்ந்து படியுங்கள்!

from Blogger http://ift.tt/1sQ62iR
via IFTTT

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் http://ift.tt/1zVkz3a    ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் .. இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும். ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் 1. அஸ்வினி ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய 2. பரணி கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய மூல காரணீய கால காலதே நம: சிவாய பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய 3. கிருத்திகை இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய 4. ரோஹிணி ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய 5. ம்ருகசீர்ஷம் வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய 6. திருவாதிரை ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய 7. புனர்பூசம் காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய 8. பூசம் ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய 9. ஆயில்யம் யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய 10. மகம் தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய 11. பூரம் ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய 12. உத்திரம் தீனமான வாளி காம தேனவே நம: சிவாய ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய 13. ஹஸ்தம் ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய 14. சித்திரை ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய 15. ஸ்வாதி ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய 16. விசாகம் பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய 17. அனுஷம் மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய 18. கேட்டை ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய 19. மூலம் திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய 20. பூராடம் அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய 21. உத்தராடம் கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய 22. திருவோணம் விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய 23. அவிட்டம் அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய 24. சதயம் ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய 25. பூரட்டாதி புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய 26. உத்தரட்டாதி அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய 27. ரேவதி சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவா கௌரி மது

  
ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் ..
இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.
ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்
1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய
2. பரணி
கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய
3. கிருத்திகை
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய
4. ரோஹிணி
ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய
5. ம்ருகசீர்ஷம்
வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய
6. திருவாதிரை
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய
7. புனர்பூசம்
காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய
8. பூசம்
ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய
9. ஆயில்யம்
யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய
10. மகம்
தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய
11. பூரம்
ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய
12. உத்திரம்
தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய
13. ஹஸ்தம்
ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய
14. சித்திரை
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய
15. ஸ்வாதி
ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய
16. விசாகம்
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய
17. அனுஷம்
மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய
18. கேட்டை
ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய
19. மூலம்
திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய
20. பூராடம்
அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய
21. உத்தராடம்
கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய
22. திருவோணம்
விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய
23. அவிட்டம்
அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய
24. சதயம்
ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய
25. பூரட்டாதி
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய
26. உத்தரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய
27. ரேவதி
சூலினே நமோ நம:
கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவா
கௌரி மது

from Blogger http://ift.tt/1zVkxbI
via IFTTT

நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம் http://ift.tt/1APQL6d   நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம்.அதே போல,நமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் தொகுப்பில் எட்டில் ஒரு பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் விதமாக நமது பிறப்பும்,நமது ஜனன ஜாதகமும் அமைந்திருக்கிறது.இந்த உண்மையை உணர 12 வருடங்களாக பலதரப்பட்ட மக்களின் ஜாதகங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்க முடிந்தது. மீதி ஏழு பங்குகள் பிற நமது தாத்தா பாட்டியின் பேரன் பேத்திகளுக்கு பிரிந்துவிடும். நமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது மாற்ற முடியாது , பூஜைகள், பரிகாரங்கள் மூலமாக நமது தீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும், அந்த பூஜைகள், பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக் கர்மவினைகள் குறையத்து வங்கும் அதே சமயம் அந்த பூஜைகள், பரிகாரங்களை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும். சனியும், செவ்வாயும் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் விதமாக ஏழாம் ராசியில் இருந்தாலோ அல்லது நான்காம் ராசி மற்றும் பத்தாம் ராசியில் இருந்தாலே அது கடுமையான கர்மவினைகளைக் காட்டுகிறது. நாம் முற்பிறவிகளில் செல்வச் செருக்கோடு நமது ரத்த உறவுகளின் பலவீனத்தைக் கொண்டு அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் செய்திருக்கிறோம் என்பதும்; இந்த ஜன்மத்தில் அதே மாதிரியான வேதனைகளை நாம் அனுபவிக்கப்பிறந்திருக்கிறோம் என்பதும் உண்மை. மேலும் நாம் எந்த வழிவம்சத்தில் பிறந்திருக்கிறோமோ அந்த வழி வம்சத்தில் நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் சொத்துக்காகவோ வேறு சிலபல காரணங்களுக்காகவே பல ஆண்டுகள் சண்டையிட்டுருக்கிறார்கள். அப்போது பலவீனமான நமது முன்னோர்களின் பெண் உறவுகள் கடுமையாக சாபமிட்டிருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகும். அந்த சாபத்தை நமது குடும்பத்தில் நாம் மட்டுமே அனுபவிக்கப் பிறந்திருக்கிறோம் என்று பொருள். ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால், அதில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டுமே இவ்வாறு அதன் பிறந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருக்கும்; அல்லது ஒருவரையொருவர் பார்க்கும் விதமாக அமைந்திருக்கும். நம் கர்மவினைகளை மாற்றும் சக்தி அன்னதானத்துக்கு உண்டாமுல்ல.

 
நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம்.அதே போல,நமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் தொகுப்பில் எட்டில் ஒரு பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் விதமாக நமது பிறப்பும்,நமது ஜனன ஜாதகமும் அமைந்திருக்கிறது.இந்த உண்மையை உணர 12 வருடங்களாக பலதரப்பட்ட மக்களின் ஜாதகங்களை
ஆராய்ந்து கண்டுபிடிக்க முடிந்தது. மீதி ஏழு பங்குகள் பிற நமது தாத்தா பாட்டியின் பேரன் பேத்திகளுக்கு பிரிந்துவிடும்.
நமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது மாற்ற முடியாது , பூஜைகள், பரிகாரங்கள் மூலமாக நமது தீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும், அந்த பூஜைகள், பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக் கர்மவினைகள் குறையத்து வங்கும் அதே சமயம் அந்த பூஜைகள், பரிகாரங்களை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும்.

சனியும், செவ்வாயும் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் விதமாக ஏழாம் ராசியில் இருந்தாலோ அல்லது நான்காம் ராசி மற்றும் பத்தாம் ராசியில் இருந்தாலே அது கடுமையான கர்மவினைகளைக் காட்டுகிறது. நாம் முற்பிறவிகளில் செல்வச் செருக்கோடு நமது ரத்த உறவுகளின் பலவீனத்தைக் கொண்டு அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் செய்திருக்கிறோம் என்பதும்; இந்த ஜன்மத்தில் அதே மாதிரியான வேதனைகளை நாம் அனுபவிக்கப்பிறந்திருக்கிறோம் என்பதும் உண்மை.

மேலும் நாம் எந்த வழிவம்சத்தில் பிறந்திருக்கிறோமோ அந்த வழி வம்சத்தில் நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் சொத்துக்காகவோ வேறு சிலபல காரணங்களுக்காகவே பல ஆண்டுகள் சண்டையிட்டுருக்கிறார்கள். அப்போது பலவீனமான நமது முன்னோர்களின் பெண் உறவுகள் கடுமையாக சாபமிட்டிருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகும். அந்த சாபத்தை நமது குடும்பத்தில் நாம் மட்டுமே அனுபவிக்கப் பிறந்திருக்கிறோம் என்று பொருள்.

ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால், அதில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டுமே இவ்வாறு அதன் பிறந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருக்கும்; அல்லது ஒருவரையொருவர் பார்க்கும் விதமாக அமைந்திருக்கும். நம் கர்மவினைகளை மாற்றும் சக்தி அன்னதானத்துக்கு உண்டாமுல்ல.

from Blogger http://ift.tt/1zVktse
via IFTTT

அலோபதி டாக்டரிடம் போகாதீர்கள்… எளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள் http://ift.tt/1AtVH2x   நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். 6. வாயு தொல்லை வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும். 7. வயிற்று வலி வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும். 8. சரும நோய் கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும். 9. மூக்கடைப்பு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். 10. கண் எரிச்சல், உடல் சூடு வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். 11. வயிற்றுக் கடுப்பு வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். 12. பற் கூச்சம் புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும். 13. வாய்ப் புண் வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும். 14. தலைவலி பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும். 15. வயிற்றுப் பொருமல் வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 16. அஜீரணம் ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும். ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும். 17. இடுப்புவலி சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். 18. வியர்வை நாற்றம் படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும். 19. உடம்புவலி சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும். 20. ஆறாத புண் விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். 21. கண் நோய்கள் பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும். 22. மலச்சிக்கல் தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும். 23. கபம் வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும். 24. நினைவாற்றல் வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். 25. சீதபேதி சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும். 26. ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். 27. பூச்சிக்கடிவலி எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும். 28. உடல் மெலிய கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும். 29. வயிற்றுப்புண் பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். 30. வயிற்றுப் போக்கு கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். 31. வேனல் கட்டி வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும். 32. வேர்க்குரு தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம். 33. உடல் தளர்ச்சி முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். 34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம். 35. தாய்ப்பால் சுரக்க அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். 36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும். 37. எரிச்சல் கொப்பளம் நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது. 38. பித்த நோய்கள் கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும். 39. கபக்கட்டு நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும். 40. நெற்றிப்புண் நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும். 41. மூக்கடைப்பு இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும்.மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது. 42. ஞாபக சக்தி வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும். 43. மாரடைப்பு சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம் 44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். 45. கை சுளுக்கு கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும். 46. நீரிழிவு அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும். 47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். 48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன் புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம் 49. உடல் வலுவலுப்பு ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும். 50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும். கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். இயற்கை முறைக்கு மாறுவோம்… பாரம்பரிய பாரத இயற்கை மருத்துவத்தில் வாழ்வோம்

 

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும்.மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்…
பாரம்பரிய பாரத இயற்கை மருத்துவத்தில் வாழ்வோம்

from Blogger http://ift.tt/1GIWGhg
via IFTTT

Don’t be afraid – Sri Sarada Devi http://ift.tt/eA8V8J   Don’t be afraid.Human birth is full of suffering and one has to endure everything patiently,taking the name of god.None,not even god in human form,can escape the sufferings of body and mind.I tell you onething my child-“If you want peace,do not find fault with others .Rather see your own faults.Learn to make the world your Own.NoOne is a stranger,my child;The whole world is your Own. – Sri Sarada Devi

 
Don’t be afraid.Human birth is full of suffering and one has to endure everything patiently,taking the name of god.None,not even god in human form,can escape the sufferings of body and mind.I tell you onething my child-“If you want peace,do not find fault with others .Rather see your own faults.Learn to make the world your Own.NoOne is a stranger,my child;The whole world is your Own.
– Sri Sarada Devi

from Blogger http://ift.tt/1ATsXOJ
via IFTTT

இறந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாமா? http://ift.tt/1ATsXhw  via: http://www.vikatan.com Ques:‘‘எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எடுத்து அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளைச் செய்தேன். இதனால் எனக்கு சட்டப்படி ஏதாவது பிரச்னை வருமா?’’ என்று கேட்டு நாணயம் விகடனுக்கு வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார்.  Ans: அவரது கேள்வியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர். “வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. எனவே, ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் பணத்தை எடுப்பது சட்டப்படி தவறு. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வாசகரின் குடும்பத்தில் அவரைத் தவிர்த்து வேறு வாரிசு யாராவது இருந்து, அவர்கள் பிரச்னை செய்தால், வங்கியானது அவர் மீது நடவடிக்கை எடுக்கும். ஒருவேளை அவர்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இனிவரும் காலத்தில் யாரும் இப்படி செய்யமாட்டோம் என எல்லா வாரிசுகளும் நாமினிகளும் எழுதி வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமாட்டோம். பொதுவாக, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், அவரது நாமினி மற்றும் வாரிசுதாரர்கள் அதை உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பது அவசியம். கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டதற்கான இறப்புச் சான்றிதழ், ஏடிஎம் கார்டு, பாஸ்புக், காசோலை புத்தகம் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதி தரவேண்டும். அதாவது, வங்கிக் கணக்கில் நாமினி குறிப்பிடப்பட்டிருந்தால், அவருடைய பெயருக்கு மாற்றித்தருவார்கள். நாமினி பெயர் குறிப்பிடப்படாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது அதில் யாரிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள் ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் உரியவரிடத்தில் பணம் ஒப்படைக்கப் படும். மேலும், இந்த வாரிசுதாரர்களில் யாராவது நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பணத்தை எடுப்பாரெனில், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இது முறைகேடாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிடாது. ஏனெனில், ஏடிஎம் கார்டு மற்றும் பின்நம்பர் ஒருவரின் தனிப்பட்ட விஷயம். இதுவே, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவுன்ட் (கணவன் – மனைவி, அப்பா-மகன்) என்று வைத்திருந்தால், தனித்தனி ஏடிஎம் கார்டு இருக்கும். அந்தசமயத்தில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இருவருக்கும் அந்தப் பணம் உரிமையானது. என்றாலும்,    கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியம்’’ என்றார். இதுபோன்ற சமயங்களில் ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும்  சட்டப்படி யான செயல்களை மேற்கொள்வதே சிறப்பாக இருக்கும்.

Ques:‘‘எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எடுத்து அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளைச் செய்தேன். இதனால் எனக்கு சட்டப்படி ஏதாவது பிரச்னை வருமா?’’ என்று கேட்டு நாணயம் விகடனுக்கு வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். 
Ans: அவரது கேள்வியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.
“வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. எனவே, ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் பணத்தை எடுப்பது சட்டப்படி தவறு. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வாசகரின் குடும்பத்தில் அவரைத் தவிர்த்து வேறு வாரிசு யாராவது இருந்து, அவர்கள் பிரச்னை செய்தால், வங்கியானது அவர் மீது நடவடிக்கை எடுக்கும். ஒருவேளை அவர்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இனிவரும் காலத்தில் யாரும் இப்படி செய்யமாட்டோம் என எல்லா வாரிசுகளும் நாமினிகளும் எழுதி வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமாட்டோம்.

பொதுவாக, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், அவரது நாமினி மற்றும் வாரிசுதாரர்கள் அதை உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பது அவசியம். கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டதற்கான இறப்புச் சான்றிதழ், ஏடிஎம் கார்டு, பாஸ்புக், காசோலை புத்தகம் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதி தரவேண்டும். அதாவது, வங்கிக் கணக்கில் நாமினி குறிப்பிடப்பட்டிருந்தால், அவருடைய பெயருக்கு மாற்றித்தருவார்கள்.
நாமினி பெயர் குறிப்பிடப்படாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது அதில் யாரிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள் ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் உரியவரிடத்தில் பணம் ஒப்படைக்கப் படும். மேலும், இந்த வாரிசுதாரர்களில் யாராவது நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பணத்தை எடுப்பாரெனில், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

இது முறைகேடாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிடாது. ஏனெனில், ஏடிஎம் கார்டு மற்றும் பின்நம்பர் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்.
இதுவே, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவுன்ட் (கணவன் – மனைவி, அப்பா-மகன்) என்று வைத்திருந்தால், தனித்தனி ஏடிஎம் கார்டு இருக்கும். அந்தசமயத்தில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இருவருக்கும் அந்தப் பணம் உரிமையானது. என்றாலும்,    கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியம்’’ என்றார்.
இதுபோன்ற சமயங்களில் ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும்  சட்டப்படி யான செயல்களை மேற்கொள்வதே சிறப்பாக இருக்கும்.

from Blogger http://ift.tt/1ATsXOC
via IFTTT

தாய்லாந்தில் திருமணம் செய்யும் இந்தியர்களுக்கு இனி யோகம் தான் http://ift.tt/1ATsXOw பாங்காக்: தங்கள் நாட்டில் திருமணம் செய்ய விரும்பும் இந்தியர்களுக்கு, விமானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரத் தயாராக உள்ளதாக, தாய்லாந்து பிரதமர் பிரயூத் சனோச்சா கூறியுள்ளார். தாய்லாந்து பிரதமர் பிரயூத் சனோச்சா கூறியதாவது: ஏராளமான இந்தியர்கள், தாய்லாந்தில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் திருமணம் செய்வதை விரும்புகின்றனர். இந்த முக்கியமான நிகழ்வை வாழ்நாள் முழுவதும் நினைத்து பார்ப்பதற்காக, தாய்லாந்தில் அவர்கள் திருமணம் செய்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை ஊக்குவிக்க, தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இனி, தாய்லாந்தில் திருமணம் செய்ய விரும்பும் இந்திய மணமக்களை, இந்தியாவிலிருந்து தாய்லாந்துக்கு அழைத்து செல்வதற்கு விமான வசதி செய்து தரப்படும்.வாழ்நாளில் மறக்க முடியாத, மிகவும் ரம்மியமான இடத்தில் அவர்கள் திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். தாய்லாந்தும், இந்தியாவும், ஒரே மாதிரியான கலாசாரம் உடைய நாடுகள். சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள, அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

பாங்காக்: தங்கள் நாட்டில் திருமணம் செய்ய விரும்பும் இந்தியர்களுக்கு, விமானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரத் தயாராக உள்ளதாக, தாய்லாந்து பிரதமர் பிரயூத் சனோச்சா கூறியுள்ளார்.
தாய்லாந்து பிரதமர் பிரயூத் சனோச்சா கூறியதாவது: ஏராளமான இந்தியர்கள், தாய்லாந்தில் உள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் திருமணம் செய்வதை விரும்புகின்றனர். இந்த முக்கியமான நிகழ்வை வாழ்நாள் முழுவதும் நினைத்து பார்ப்பதற்காக, தாய்லாந்தில் அவர்கள் திருமணம் செய்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை ஊக்குவிக்க, தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இனி, தாய்லாந்தில் திருமணம் செய்ய விரும்பும் இந்திய மணமக்களை, இந்தியாவிலிருந்து தாய்லாந்துக்கு அழைத்து செல்வதற்கு விமான வசதி செய்து தரப்படும்.வாழ்நாளில் மறக்க முடியாத, மிகவும் ரம்மியமான இடத்தில் அவர்கள் திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். தாய்லாந்தும், இந்தியாவும், ஒரே மாதிரியான கலாசாரம் உடைய நாடுகள். சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள, அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

from Blogger http://ift.tt/1CiDcQJ
via IFTTT

ஒருவன் தவறு செய்வதற்குக் காரணம்??

ஒருவன் தவறு செய்வதற்குக் காரணம் ’தான் யார்’ என்ற போதம் (உணர்வு) இல்லாதது தான். எனவே தான் ஸனாதன தர்மம் யாரையும் ஒதுக்காமல் அவருக்கு வேண்டிய அறிவு (ஞானம்) வழங்க வேண்டும் என கூறுகிறது. வேடனான ரத்னாகரனை மகரிஷிகள் கொள்ளைக்காரன் என்று கூறி ஒதுக்கி இருந்தால் இன்று நமக்கு வால்மீகி மகரிஷி கிடைத்திருக்க மாட்டார். ஒரு கொள்ளைக்காரன் கூட மகாத்மாவாக மாற முடியும் என்று ஸனாதன தர்மம் எடுத்துக் காட்டியுள்ளது. ரத்தினக் கல் அல்லது வைரம் மலத்தில் கிடந்தாலும் யாரும் அதை விட்டு வைக்க மாட்டார்கள். அதில் உள்ள அழுக்குகளை அகற்றி வைத்துக்கொள்ளவே விரும்புவர். அது போல எல்லோரிடமும் இறைவனது சைதன்யம் (இறை உணர்வு) நிறைந்து இருப்பதால் ஒருவரையும் நம்மால் ஒதுக்க இயலாது. குணத்தில் சிறியவர், பெரியவர் என்று வித்தியாசமில்லாமல் எல்லோரிடமும் இறைவனைத் தரிசிக்க இயல வேண்டும். அதற்காக நம்முடைய மனதை மறைத்துள்ள அழுக்குகளைத் தான் நாம் முதலில் நீக்க வேண்டும்.— அம்மா Amma