தமிழ்நாடு Vs குடிகாரநாடு

டாஸ்மாக் மதுபான கடைகளை மூடிவிட்டால் கள்ளசாராயம் பெருகிவிடும்  என்று பல  அதிமேதாவிகள்  சொல்கிறார்கள் ….

அவர்களுக்கும் இந்த குடிகார அரசுகளுக்கும்  ஒரு சில கேள்விகள் ..

1 .புதிதாக உருவாகும் குடிகாரர்களை தடுக்கமுடியும் தானே..இதற்காவது மதுவிலக்கை1 அமுல்படுத்தலாம் தானே….

2. அரசாங்கமே விற்பதால் அதை குடிபதற்கு அரசாங்கம் இந்த சமூகம் அங்கீகாரம் அளித்தது போல எண்ணித்தானே  ஒதுக்குப்புறத்தில் குடித்தவர்கள் எல்லோரும் இன்று வீதிகளிலும் பாலங்களில் அமர்ந்து பொதுவான இடங்களில் குடித்துவருகின்றனர்…

3.வீதிக்கு வீதி திறந்ததால் தானே குவார்ட்டரோடு முடித்தவன் இன்று புல் வரை குடிக்கிறான்….

4. மதுவுக்கு அடிமை ஆனவர்களை மீட்க எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத இந்த அரசாங்கத்தின் நோக்கம் என்ன? எப்படியாவது நாசாமாக போகட்டும் அரசாங்கத்தின் கசானா நிரம்பினால் போதும் என்பது மட்டுமே நோக்கமா?

5. வருமானமே முக்கியம் என்றால் ஏன் விபசார விடுதியும் திறந்துவிட வேண்டியது தானே…இன்னும் பல இலவசங்களை மக்களுக்கு கொடுத்து அடிமுட்டாள் ஆக்கலாம் ..

6. குடிப்பவன் திருந்தினால் ஒழிய  அவர்களை மாற்ற முடியாது என விட்டு விட்டால் அதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்? திருடனும் தான் திருந்தாமல் கொள்ளை அடிகின்றான்..அதற்காக வங்கி லாக்கர் எல்லாவற்றையும் திறந்தே வைத்து விடுமா அரசாங்கம்???????????

7.எத்தனை எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வந்து இருக்கிறது..தினம் எத்தனை எத்தனை உயிர் இழப்புகள் ,விபத்துகள்…இந்தியாவில் விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்பதுதான் இந்த குடிகார அரசாங்கத்தின் சாதனையா??

 7. மதுவிலக்கு என்ற ஒன்றை அமுல்படுதவே இவர்களுக்கு விருப்பம் இல்லை என்னும் போது இந்த கேள்விகள் எல்லாம் அபத்தமாக தான் தெரியும் பலருக்கும்… ஒருகட்டத்தில் இந்த நாடே குடியால் சுடுகாடாக போகும் போதுதான் தெரியும் ..

அந்த நேரத்தில் எல்லா மத கடவுளும் நினைத்தால் கூட இந்த நாட்டையும் மக்களையும் காப்பாற்ற முடியாது….

8. தன்னுடய அரசு அதை செய்தது இதை செய்தது என கூறும் ஜெயா மக்களை குடிகாரர்களாக மாற்றுவதை சொல்ல வேண்டியதுதானே…

9.எல்லா திட்டத்திலும் தன்னுடைய படத்தை வைத்து இருக்கும் ஜெயா மதுபாட்டிலில் தன்னுடைய படத்தை போட்டு அதை ஜெயா மதுபானக்கடை என பெயர் மாற்றி வைத்து கொள்ளலாம்.

Leave a comment