ஞான கரையினிலே

ஞானி ஒருவரைக் காணவந்த இளைஞன் ஒருவன், சுவாமி! நான் அதிர்ஷ்டமில்லாதவன். எந்த செயலைச் செய்தாலும் அது தோல்வியிலேயே முடிகிறது! என்றான். அவனை ஒரு பொற்கொல்லரிடம் அழைத்துச் சென்றார் ஞானி. 

அங்கேயிருந்த தங்கக் கட்டியைக் காட்டி அதை அடிக்காமல், உருக்காமல், நீட்டாமல், நகையாக் செய்து தரும்படி கூறினார். அது எப்படி சுவாமி முடியும்? என்றான் பொற்கொல்லன். உடனே ஞானி, இளைஞனிடம் பார்த்தாயா! ஓர் ஆபரணம் செய்ய வேண்டுமென்றால்கூட, தங்கம் தன்னை உருக்குதல், அடித்தல், நீட்டல் போன்ற சோதனைகளைத் தாண்டித்தான் வரவேண்டியுள்ளபோது, வாழ்க்கையில் வெற்றி என்பது சாதாரண விஷயமா? சோதனைகளின் போது உன் மனதை நழுவ விடாமல் இரும்பு போல் உறுதியாயிரு. பொன் நகையாய் மிளிர்வாய்! என அறிவுறுத்த, உண்மையுணர்ந்தான் இளைஞன்.

from Blogger http://ift.tt/1Ltf0Ap
via IFTTT

Leave a comment