First Complete Android App for Dr. Kalam in Tamil

abj112

மென்பொருள்

Mobile App By, For and Of the Indian
To know all about Dr. A P J Abdul Kalam:
* His short Biography.
* Surprising facts.
* Inspirational Quotes.
* Rare pictures.

Install it, Rate the app and post your comments

click here : https://play.google.com/store/apps/details?id=in.gethugames.kalam

கூகுள் புதிய லோகோவில் உள்ள பத்து முக்கிய அம்சங்கள்

gg

கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்துள்ளது. புதிய லோகோவை நீங்கள் கவனித்திருக்கலாம். கூகுள் புதிய லோகோவில் உள்ள பத்து முக்கிய அம்சங்கள் இதோ…

1. இந்த புதிய லோகோ கூகுளின் ஏழாவது லோகோ. 1998 ல் தேடியந்திரமாக அறிமுகமான பின், ஆறாவது லோகோ.

2. கூகுள் லோகோவை மாற்றுவது புதிதல்ல.ஆனால் கூகுள் முதல் முறையாக லோகோ மாற்றம் பற்றி தனது முகப்பு பக்கத்தில் டூடுல் சித்திரம் மூலம் உலகிற்கு தகவல் தெரிவித்துள்ளது. முகப்பு பக்கத்தில் உள்ள டூடுலை (லோகோ) கிளிக் செய்தால் இது பற்றிய விவரத்தை காணலாம்.

3.இந்த புதிய லோகோவில் ஒருவித முழுமையையும், எளிமையையும் கவனிக்கலாம். கணிதவியல் வடிவத்தின் தூய்மை மற்றும் பள்ளி புத்தகத்திற்கான அச்சு வடிவம் இரண்டின் கலைவையே இதற்கு காரணம்.

4. கூகுளின் பழைய லோகோவில் பாருங்கள். இ எனும் எழுத்து சற்று சாய்வாக இருக்கும். புதிய லோகோவிலும் இ எழுத்து சாய்ந்தே இருக்கும். கூகுளின் எதையும் வித்தியாசமாக செய்யும் கலாச்சாரத்தின் அடையாளம் இது.

5.புதிய லோகோ மட்டும் அல்ல, புதிய எழுத்துருவும் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுளின் புதிய சேவைகளை அறிவிக்க இந்த எழுத்துரு பயன்படுத்தப்படும். லோகோ மற்றும் சேவை அறிவிப்புகளுக்கு இடையிலான தனித்தன்மை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

6. இதற்கு முன்னர் செல்போன்களில் குறைந்த வேக இணைப்பு எனில் அதற்கேற்ற கூகுள் லோகோ இடம்பெறும். இனி எல்லா இணைப்புகளிலும் ஒரே லோகோ தான்.

7.பழைய லோகோவின் எடை தெரியுமா? 14,000 பைட்கள். புதிய லோகோ மிகவும் இலேசானது. 305 பைட் தான் இதன் எடை.

8. புதிய லோகோவில் சிவப்பு, மஞ்சள்,பச்சை மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களின் துடிப்பான தன்மை லோகோவின் முழுமைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது.

9. கூகுள் மேற்கொண்டுள்ள லோகோ மாற்றங்களில் இதுதான் மிகவும் பெரியது. இதற்கு முந்தைய மாற்றங்கள் சிறிய அளவிலானவையே.

10. லோகோவின் சுருக்கமான வடிவத்தை குறிக்கும் ஆங்கில எழுத்தான சிறிய ஜிக்கு பதிலாக பெரிய ஜி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்தில் சிவப்பு, மஞ்சள்,பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு வண்ணங்களும் இருக்கும்.

கூகுள் லோகோ வரலாற்றை அறிய

கூகுள் தேடல் பட்டியலை நீக்கும் வழிகள்

g11

நாம் தினந்தோறும் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறோம். அது பெர்சனல் கம்ப்யூட்டராகவோ அல்லது மொபைல் சாதனமாகவோ இருக்கலாம். தகவலைத் தேடிப் பெற இவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகிறோம். இதில் தகவல் தேடிப் பெற பலரின் விருப்பமாக இருப்பது கூகுள் தேடல் சாதனமே. இந்த தேடல்களில், பல நம்முடைய தனிப்பட்ட விருப்ப தேடல்கள் நிச்சயம் இருக்கலாம். இந்த தேடல்களை மற்றவர்கள் அறியக் கூடாது என விருப்பப்படுவோம். ஆனால், இவை நம் கம்ப்யூட்டரில், மொபைல் சாதனங்களில் இயக்கப்படும் கூகுள் சர்ச் இஞ்சினில் பதியப்பட்டு, அதனைப் பயன்படுத்தும் மற்றவர்கள் பார்க்கக் கிடைக்கும். இவை தனிப்பட்ட நபரின் தேடல்கள் என்றால், இவை காட்டப்படக் கூடாதே. இவற்றை சர்ச் இஞ்சினிலிருந்து நீக்கப்படும் வழிகளை நாம் தெரிந்து கொண்டால், நிச்சயம் நிம்மதியாக இருப்போம். அவற்றை இங்கு காணலாம்.

முதலில், உங்கள் கூகுள் அக்கவுண்ட் வழியே உட்செல்லவும். பின்னர் கூகுள் ஹிஸ்டரி பக்கம் (https://history.google.com/history/) செல்லவும். நீங்கள் ஏற்கனவே உங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்திருந்தாலும், மீண்டும் பாஸ்வேர்ட் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.

உங்கள் கூகுள் தேடல்களின் ”ஹிஸ்டரி” பக்கம் காட்டப்படும். இந்தப் பக்கத்தில் மேலாக உங்கள் தேடல் வகைகள் (trends) காட்டப்படும். இதற்குக் கீழாக, ஒரு செக் பாக்ஸ் மற்றும் “Remove items” பட்டன் ஒன்றும் தரப்படும். இதற்குக் கீழாக, உங்கள் தேடல்களின் வகைகள் பட்டியலிடப்படும். அனைத்து தேடல் குறிப்புகளையும் நீக்க வேண்டும் எனில், செக் பாக்ஸ் தேர்ந்தெடுத்து, “Remove items” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் எத்தனை பதிவுக் குறிப்புகளை நீங்கள் நீக்கியுள்ளீர்கள் என்று ஒரு செய்தி காட்டப்படும்.

இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பக்கத்தில், நீங்கள் மேற்கொண்ட அனைத்து தேடல் பதிவுகளும் காட்டப்படுவதில்லை. நீங்கள் நீக்கிய பின்னர், அங்கு உங்களின் இன்னும் சில தேடல் பதிவுகளைப் பார்க்கலாம். இவற்றையும் நீக்க வேண்டும் என எண்ணினால், மீண்டும் செக் பாக்ஸைத் தேர்ந்தெடுத்து, “Remove items” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அப்போது காட்டப்படும் பதிவுகளுக்கு முன்னால் மேற்கொண்ட தேடல் பதிவுகளைக் கண்டு நீக்க வேண்டும் என எண்ணினால், “Older” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த பட்டன், அந்தப் பக்கத்தில் காட்டப்படும் பட்டியலுக்கு மேலாக, வலது பக்கத்தில் காணப்படும். இதே போல இன்னொரு பட்டன் பட்டியலுக்குக் கீழாகவும் காட்டப்படும்.

உங்கள் தேடல் குறிப்புகள் மிக அதிகமாக இருந்தால், இப்படி ஒவ்வொரு பக்கமாகக் கண்டறிந்து நீக்குவது சற்று கடினமாகத்தான் இருக்கும். பல பதிவுக் குறிப்புகளை ஒரே நேரத்தில் நீக்க வேண்டும் என எண்ணினால், “History” பக்கத்தில் மேலாக வலது மூலையில் உள்ள கியர் பட்டனைக் கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில் “Remove Items” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் “Remove Items” என்ற டயலாக் பாக்ஸில், “Remove items from” என்ற பட்டியலில் ஏதேனும் ஓர் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் தேடல்கள் அனைத்தையும் நீக்க வேண்டும் என எண்ணினால், “the beginning of time” என்பதனைத் தேர்ந்தெடுத்து “Remove” என்பதனைக் கிளிக் செய்திடவும்.

g12

இனி உங்கள் தேடல்கள் குறித்த பதிவுகள் எதுவும் இருக்காது. இந்த வேலையை மேற்கொண்ட பின்னர், நம் தேடல்களை, கூகுள் பின் தொடர்ந்து கண்காணிப்பதனால் தானே இந்த பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏன், நம்மைப் பின் தொடர்வதிலிருந்து கூகுள் தேடல் சாதனத்தை நிறுத்தக் கூடாது என நாம் எண்ணலாம். அதற்கும் வழி உள்ளது. தேடுவதைப் பதிவு செய்வதை முதலில் தற்காலிகமாக நிறுத்தலாம். “History” திரைப் பக்கத்தில், மேல் வலது பக்கத்தில் உள்ள கியர் ஐகானை கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், “Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Account history” பக்கம் கிடைக்கும். இதில் “Pause” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் காட்டப்படும். நீங்கள் உறுதியாக உங்கள் தேடல்கள் பதிவு செய்யப்படக் கூடாது என முடிவு செய்கிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் தேடல்களை கூகுள் தெரிந்து பதிவு செய்வதில் உள்ள நன்மைகளைப் பட்டியலிடும். அவ்வாறு அறியப்படக் கூடாது என்றால், மொத்தமாகத் தடை செய்திடாமல், அப்படிப்பட்ட தேடல்களின் போது, மற்றவர் அறியாத வகை வழியான Incognito mode நிலையைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அறிவுறுத்தும்.

இதற்குப் பின்னும் நீங்கள் தேடலைப் பதிவு செய்வதனை நிறுத்தச் செய்திட வேண்டும் என முடிவு எடுத்தால், இந்த டயலாக் பாக்ஸில், “Pause” என்பதில் கிளிக் செய்திடவும். உடன், நீங்கள் “Account history” பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். “Pause” பட்டன், “Turn on” என்ற பட்டனாக மாறிவிடும். மாறிய இந்த பட்டனில் கிளிக் செய்தால், மீண்டும் ஒரு டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு, அதில் உங்கள் தேடல்களைப் பதிவு செய்திட விருப்பமா என்று கேட்கப்படும்.

கூகுள் சர்ச் தேடல்களைப் பின் தொடர்வதனை நிறுத்துவதுடன், ஹிஸ்டரியை சேவ் செய்வதிலிருந்து, குக்கீஸ் மற்றும் நம் தனி நபர் தகவல்களைப் பதிவு செய்வதனை நிறுத்தலாம். ஆண்ட்ராய்ட் சாதனங்களில், ஹிஸ்டரி, கேஷ் மெமரி, குக்கீஸ் போன்றவற்றை நீக்கிடவும் வழிகள் உள்ளன. ஆப்பிள் சாதனங்களில் இயங்கும் சபாரி பிரவுசரில் உள்ள இவற்றை நீக்கவும் இதே போன்று வழிகள் உள்ளன. பேஸ்புக் சர்ச் ஹிஸ்டரியையும் நீக்கலாம்.

விண்டோஸ் ரீபூட் ஏன்? எதற்கு?

ree1

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குபவர்கள் அடிக்கடி அலுத்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்வி, ஏன், விண்டோஸ் எதற்கெடுத்தாலும், ரீபூட் செய்திடு என்று கேட்டு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது? என்பதே. ஏன்? இதனால், விண்டோஸ் இயக்கம் என்ன மாறுதலை ஏற்படுத்திக் கொள்கிறது? அதன் செயல்முறை எப்படி ரீ பூட் செய்வதால் செம்மைப்படுத்தப்படுகிறது? ரீ பூட் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? எதனை நாம் இழக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு இங்கு விடை காணலாம்.

பொதுவாக, விண்டோஸ் இயக்கத்தில் இருக்கையில், அதன் சிஸ்டம் பைல்களை மாற்றி அமைக்க முடியாது. அந்த பைல்கள் எல்லாம், செயல்பாட்டில் வளைக்கப்பட்டிருக்கும். அவை விடுவிக்கப்படாத நிலையில், அவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள இயலாது.

ரீபூட் என்ன செய்கிறது?

விண்டோஸ் இயக்கம் செயல்பாட்டில் உள்ள பைல்களை அப்டேட் செய்திடவோ அல்லது நீக்கவோ முடியாது. விண்டோஸ் அப்டேட் செயல்பாடு, புதிய அப்டேட் பைல்களைத் தரவிறக்கம் செய்திடுகையில், நேரடியாக, விண்டோஸ் இயக்கத்தில் அதனைச் செயல்படுத்த இயலாது. இயக்கத்தில் இருக்கும் சிஸ்டம் பைல்களில் எந்த மாற்றத்தினையும் மேற்கொள்ள இயலாது. எனவே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நிறுத்தி மீண்டும் இயக்கினால் தான், அவை தானாக மாற்றிக் கொள்ள வழி கிடைக்கும். ரீபூட் இதனைத்தான் செய்கிறது.

சில வேளைகளில், பைல்களை நீக்கும் போதும் ரீபூட் தேவைப்படுகிறது. சில வகையான சாப்ட்வேர் தொகுப்புகளை அப்டேட் செய்திடுகையில் அல்லது நீக்குகையில், ரீபூட் அவசியத் தேவையாகிறது. எடுத்துக் காட்டாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை அல்லது ஹார்ட்வேர் ட்ரைவர் பைல்களை இயக்குகையில், அவற்றின் பைல்கள் மெமரியில் ஏற்றப்படுகின்றன. இத்தகைய பைல்களில் அப்டேட் செய்திடுதல் அல்லது நீக்குதல் செயல்பாடு மேற்கொள்ளப்படுகையில், விண்டோஸ் கம்ப்யூட்டரை ரீபூட் செய்திட வேண்டுகிறது. சிஸ்டம் முழுமையாக இயங்கும் முன்னர், இந்த பைல்கள் மாற்றப்பட்டு செயல்பாட்டிற்கு வருகின்றன.

ree2

விண்டோஸ் அப்டேட் ரீபூட்:

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான பேட்ச் பைல்களை அவ்வப்போது வெளியிடுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை இவை வெளியாகின்றன. மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் இவை கிடைக்கின்றன. அவை தளத்தில் ஏற்றப்பட்டவுடன், நம் கம்ப்யூட்டர் இணைய இணைப்பு பெறுகையில், தாமாகவே அவை கம்ப்யூட்டரில் இறங்குகின்றன. பின் நாம் செட் செய்தபடி, அவை பதியப்படுகின்றன. அவை பதிவு செய்யப்பட்டவுடன், சிஸ்டம் பைல்கள் அப்டேட் செய்திட நம் கம்ப்யூட்டரை ரீபூட் செய்தால் தான், புதிய பேட்ச் பைல்களின் செயல்பாட்டினால், சிஸ்டம் பைல்கள் மேம்படுத்தப்படும்.

விண்டோஸ் இயக்கம் இந்த பேட்ச் பைல்கள் கிடைத்தவுடன், உங்களைக் கட்டாயமாக ரீபூட் செய்திடக் கேட்டுக் கொள்ளும். ஏனென்றால், பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான், இந்த பேட்ச் பைல்கள் தரப்படுகின்றன. எனவே, எவ்வளவு சீக்கிரம் ரீபூட் செய்து, இவற்றை அப்டேட் செய்கிறோமோ, அந்த அளவிற்கு நம் கம்ப்யூட்டர் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. முன்பு எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பாதிக்கும் வகையில் Blaster, Sasser, மற்றும் Mydoom ஆகிய வைரஸ்கள் பரவிய போது, மைக்ரோசாப்ட் பேட்ச் பைல்களைத் தந்து, கம்ப்யூட்டரின் பயனாளரின் அனுமதியைப் பெறாமலேயே கம்ப்யூட்டரை ரீபூட் செய்தது. ஏனென்றால், அந்த வைரஸ்களின் தாக்கம் அந்த அளவிற்கு மோசமாக இருந்தது. பயனாளர்கள் காத்திருந்து, சில நாட்கள் கழித்து பூட் செய்து, அவற்றை செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தால், பேட்ச் பைல்களின் செயல்பாடு நமக்குக் கிடைக்காமலேயே போய்விடும்.

சாப்ட்வேர் பதிவதும் நீக்குவதும் மற்றும் மேம்படுத்தலும்:

சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்தாலோ, கம்ப்யூட்டரிலிருந்து அன் இன்ஸ்டால் செய்தாலோ, அல்லது அவற்றை உயரிய பதிப்பிற்கு மேம்படுத்தினாலோ, அவை உடனே கம்ப்யூட்டரை ரீபூட் செய்கின்றன. அல்லது செய்திடுமாறு கேட்டுக் கொள்கின்றன. ஏனென்றால், இந்த அப்ளிகேஷனுக்கான பைல்களை கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இருக்கும்போதே மாற்ற இயலாது. எடுத்துக் காட்டாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினைக் கம்ப்யூட்டரில் இருந்து நீக்கினால், அதனைச் சார்ந்த அனைத்து பைல்களும் நீக்கப்பட மாட்டாது. கம்ப்யூட்டரை ரீபூட் செய்தால் தான், அனைத்து பைல்களும் நீக்கப்பட்டு, முற்றிலுமாக அப்ளிகேஷன் அழிக்கப்படும்.

ரீபூட் செய்கையில் பைல்கள் எப்படி நகர்த்தப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன?:

பயன்பாட்டில் இருக்கின்ற பைல் ஒன்றை நகர்த்த, வேறு பெயரில் அமைக்க அல்லது அழிக்க, விண்டோஸ் சிஸ்டம் அப்ளிகேஷன் ஒன்றை அப்ளிகேஷன் டெவலப்பர்களுக்குத் தருகிறது. இது இந்த செயல்பாட்டிற்கான வேண்டுகோளினை HKLM\System\CurrentControlSet\Control\Session Manager\PendingFileRenameOperations என்ற இடத்தில் ரெஜிஸ்ட்ரியில் எழுதி வைக்கிறது.

விண்டோஸ் பூட் செய்கையில், அது ரெஜிஸ்ட்ரியைச் சோதனை செய்து, பைல் செயல்பாட்டிற்கான நடைமுறைத் தேவைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது. இந்த நிலையில் தான், சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை அன் இன்ஸ்டால் செய்கையில், நம்மால் அழிக்க இயலாத பைல்கள் அழிக்கப்படுகின்றன.

மைக்ரோசாப்ட் இந்த ரீபூட் விஷயத்தை, காலப்போக்கில் குறைத்துக் கொண்டே வந்துள்ளது. ரீபூட் செய்வதனை அத்தியாவசியத் தேவையாக அது காட்டுவதில்லை. விண்டோஸ் ட்ரைவர் புரோகிராம்களை, ஒன்றின் இடத்தில் இன்னொன்றை மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதி படைத்துள்ளதாக உள்ளது.இதனால் ரீபூட் தேவை இல்லாமல் போய்விடுகிறது. மேலும், புதிய பாதுகாப்பு அம்சங்கள், விண்டோஸ் இயக்கத்தினைக் கூடுதல் பாதுகாப்பு உள்ளதாக அமைத்துள்ளது. இதனால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில், விண்டோஸ் பைல்கள் அப்டேட் செய்த பின்னரும், ரீபூட் செய்திட மூன்று நாட்கள் கால அவகாசம் தரப்படுகிறது.

பேஸ்புக்கில் கணக்கு இல்லாமலேயே பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தலாம்

mes

ஃபேஸ்புக் கணக்கு பதிவு இல்லாமலேயே தொலைப்பேசி எண்ணை கொண்டு ஃபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்த முடியும் என்று சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது, மற்றொரு நடவடிக்கையாக அப்ளிக்கேஷனை அடைய விரிவுபடுத்தி ஒரு முழுமையான பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளது.

இந்த ஆண்டு முன்னதாக, ஃபேஸ்புக்கில் மெசஞ்சரை அறிமுகப்படுத்திய டெவலப்பர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், சில்லறை விற்பனையாளர்கள், உணவகங்கள் மற்றும் பிற தொழில்களுக்கு யூசர்களை நேரடியாக இணைக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

சமீபத்திய மேம்படுத்துதல்படி, யூசர்கள் அப்பிள்கேஷனை எப்பொழுது திறந்தாலும், ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லையா? என்று விருப்பத்தேர்வு மூலம் கேட்கப்படும். பின்னர் அவர்கள் தங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் புகைப்படத்துடன் அதில் பதிவு செய்யலாம்.

மொபைல் மெசேஜிங் சேவையில் தற்போது வரை 600 மில்லியன் பயனர்கள் உள்ளனர், சமீப மாதகாலமாக விளையாட்டுகள் மற்றும் வீடியோ அழைப்பு உட்பட பல புதிய அம்சங்கள் இந்த மெசேஜிங் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் ஃபிளாக்ஷிப் சமூக நெட்வொர்க்கில் 1.4 பில்லியன் பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக்கில் வீடியோக்களை பதிவேற்ற புதிய கட்டுப்பாடு

fb31

இனிமேல் யாரோ வடிவமைத்த வீடியோக்களை உங்கள் ப்ரொபைலில் பதிவேற்றி லைக்குகளும் ஷேர்களும் அள்ளுவது சுலபமாக இருக்காது. ஆம்! பலதரப்பட்ட மக்கள் பேஸ்புக்கில் நடக்கும் வீடியோ பைரசியைப்பற்றி முன் வைத்த விமர்சனங்களை அடுத்து ’video-matching tool’ஐ அறிமுகப்படுத்தவிருக்கிறது ஃபேஸ்புக். இந்த கருவியின் மூலம் வீடியோவை வடிமைத்தவர்கள் தங்கள் வீடியோக்களை யாரேனும் திருடி ரீ-போஸ்ட் செய்துள்ளார்களா என கண்காணிக்க முடியும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அந்த பதிவைப் பற்றி ஃபேஸ்புக்கில் புகார் செய்து அதை நீக்கிடலாம்.

கடந்த ஜூன் மாதம் ஆகில்வி எனும் விளம்பர நிறுவனம் நடத்திய ஆய்வு பேஸ்புக்கில் புகழ்பெற்ற வீடியோக்களில் 73% பல சைட்டுகளிலிருந்து திருடப்பட்டவையே என்கிறது. வீடியோ வணிகத்தை மேம்படுத்த திட்டமிட்ட ஃபேஸ்புக் கடந்த ஜூலை மாதம் முதல்முறையாக கண்டெண்ட் க்ரியேட்டர்களுக்கு தன்னுடைய விளம்பர லாபத்தை பங்கிட்டு தர முடிவெடுத்தது. அப்போது எழுந்த வீடியோ பைரசி பற்றிய விவாதங்களே இந்த கருவியை வடிமைப்பதற்கான மூல காரணம் என்கிறது ஃபேஸ்புக்.

தற்போது யூ-ட்யூபில் ஒரு வீடியோ உரியவருடைய அனுமதியின்றி பதிவேற்றப்பட்டால் கூகுள் தனிச்சையாகவே அதை கண்டுபிடித்து நீக்கி அதை பதிவேற்றியவருக்கு எச்சரிக்கையும் செய்து விடும். ஆனால் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவிருக்கும் கருவியோ பதிவேற்றப்பட்ட வீடியோவின் உரிமையாளர் அதனை கண்காணிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட கண்டெண்ட் க்ரியேட்டர்களுக்கு மட்டும் வழங்கி சோதித்து வருகிறது ஃபேஸ்புக்.

கம்ப்யூட்டர் பைல் சிஸ்டம்: தன்மையும் வகைகளும்

com

கம்ப்யூட்டர்கள் இயக்கத்தைப் பொறுத்த வரை, அதன் அடிப்படைகளில் ஒன்றாக, கம்ப்யூட்டர் இயக்கும் பைல் சிஸ்டம் வகை முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு வகை பைல் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்கின்றன. நாம் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் ட்ரைவ், அனைத்து சிஸ்டங்களுடன் இணைந்து இயங்க வேண்டும் என்றால் FAT32 வகை பைல் சிஸ்டத்தினைக் கொண்டிருந்தால் நல்லது. அந்த ட்ரைவ் மிகவும் பெரியதாக, அதிகக் கொள்ளளவு கொண்டதாக இருந்தால், அதற்கு என்.டி.எப்.எஸ். (NTFS) பைல் சிஸ்டம் தேவைப்படும். மேக் சிஸ்டத்தில் பார்மட் செய்யப்பட்ட ட்ரைவ்களில் HFS+ என்ற பைல் வகை பயன் படுத்தப்படுகிறது. அவை விண்டோஸ் சிஸ்டங்களில் இயங்காது. லினக்ஸ் சிஸ்டம் தனக்கென ஒரு பைல் சிஸ்டத்தைக் கொண்டு இயங்குகிறது. எனவே, ஒவ்வொரு கம்ப்யூட்டர் பயனாளரும், இந்த பைல் சிஸ்டம் வகைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதுள்ளது. ஒவ்வொன்றும் வேறு எந்த வகை சிஸ்டத்துடன் இணைந்து இயங்கும் என்பதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் இத்தனை வகை பைல் சிஸ்டங்கள் உள்ளன என அதன் அடிப்படைக் கட்டமைப்பினையும் புரிந்து கொள்ள வேண்டியதுள்ளது. இங்கு அவற்றைக் காண்போம்.

பலவகை பைல் சிஸ்டங்கள் ஏன் உள்ளன?

ஹார்ட் ட்ரைவ், ப்ளாஷ் ட்ரை அல்லது எந்த ஸ்டோரேஜ் மீடியாவாக இருந்தாலும், அவற்றில் பல வகைகளில் பைல்கள் வகைப்படுத்தப்பட்டு ஸ்டோர் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஸ்டோரேஜ் மீடியாவும், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிரிவுகளைக் (partitions) கொண்டுள்ளன. ஒவ்வொரு பார்ட்டிஷனும் ஒரு வகை பைல் சிஸ்டத்துடன் பார்மட் செய்யப்பட்டுள்ளன. பார்மட் செய்கையில், அச்செயல்பாடானது, அந்த வகை பைல் சிஸ்டத்தினைக் காலியான நிலையில் அமைக்கிறது.

ஒரு பைல் சிஸ்டம், குறிப்பிட்ட ட்ரைவில் டேட்டாவினைப் பிரித்து தனித்தனி தகவல் துண்டுகளாக அமைக்க உதவுகிறது. அது மட்டுமின்றி, இந்த பைல்கள் குறித்த தகவல்களையும், பைலின் பெயர், யார், யார் அந்த பைலைப் பார்க்க அனுமதி பெற்றுள்ளனர் மற்றும் பைல் குறித்த பிற பண்புகளையும் ஸ்டோர் செய்திட ஒரு வழி தருகிறது. இதே பைல் சிஸ்டம், ட்ரைவில் ஸ்டோர் செய்யப்படும் பைல்களுக்கான அட்டவணை ஒன்றையும் தயார் செய்து வைக்கிறது. இதன் மூலமே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அந்த ட்ரைவில் பைலைத் தேடுகையில், தேடல் மிக எளிதான செயலாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு பைல் எளிதாக இடம் அறியப்பட்டு, நமக்குக் கிடைக்கிறது.

நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த பைல் சிஸ்டத்தினைப் புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப் பட்டிருந்தால் தான், அது பைல் ஒன்றில் உள்ள டேட்டாவினைத் தர முடியும், பைல்களைத் திறக்க முடியும் மற்றும் அதனைத் திருத்தி மீண்டும் ட்ரைவில் பதிய முடியும். உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல் சிஸ்டம் ஒன்றை அறிய இயலாமல் போனால், நீங்கள் அந்த பைல் சிஸ்டத்திற்கான சப்போர்ட் தரும் ட்ரைவர் ஒன்றை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அவ்வாறு இன்ஸ்டால் செய்யவில்லை என்றால், அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் அந்த பைல் சிஸ்டத்தினைப் பயன்படுத்த முடியாது.

அப்படியானால், ஒரே ஒரு பைல் சிஸ்டம் இருக்கலாமே? ஏன் பல இருக்கின்றன? என்ற கேள்விகள் நம் மனதில் எழலாம். அனைத்து பைல் சிஸ்டங்களும் ஒரே தரமானவை அல்ல. வேறுபாடான இந்த பைல் இயக்க முறைகள், வேறுபாடான பல வழிகளில் டேட்டாவினை வகைப் படுத்துகின்றன. சில பைல் சிஸ்டங்கள், மற்றவற்றைக் காட்டிலும், செயல்பாட்டில் வேகத்தைக் கொண்டிருக்கும். சில கூடுதலான பாதுகாப்பினைக் கொண்டிருக்கும். சில மற்றவற்றைக் காட்டிலும் அதிக அளவில் ஸ்டோர் செய்திடக் கூடிய வசதியைப் பெற்றிருக்கும். சில சிஸ்டங்கள் பைல் கெட்டுப் போக வாய்ப்பே இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

கம்ப்யூட்டர் பைல்களைக் கொண்டு நாம் மேற்கொள்ளும் பலவகையான செயல்பாடுகளைக் கண்டால், மிகச் சிறந்த்து என ஒரே ஒரு பைல் சிஸ்டத்தினச் சுட்டிக் காட்ட முடியாது என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் தனக்கென ஒரு பைல் சிஸ்டத்தினைப் பயன்படுத்துகின்றன. ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பவர்களும் இதே பைல் சிஸ்டத்தினைப் பயன்படுத்துகின்றனர். மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் லினக்ஸ் சார்ந்த அடிப்படைக் கட்டமைப்பினை உருவாக்குபவர்கள் தங்களுக்குச் சொந்தமான பைல் சிஸ்டத்தினையே பயன்படுத்துகின்றனர். புதியதாக வரும் பைல் சிஸ்டங்கள், நிச்சயமாக, முன்னதாக இருந்த பைல் சிஸ்டங்களைக் காட்டிலும் வேகமாக, நிலைத்த தன்மை கொண்டவையாக, அதிகக் கொள்ள்ளவில் டேட்டா ஸ்டோர் செய்யக் கூடியவையாக உள்ளன. இவை கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளன. பைல் சிஸ்டம் ஒன்று உருவாக்கப்படுவது எளிதான செயல் அல்ல. இந்த சிஸ்டம் எப்படி பைல்கள் அமைக்கப்பட வேண்டும், அவை எப்படி வகைப்படுத்தப்பட வேண்டும், அட்டவணைப் படுத்தப்பட வேண்டும் மற்றும் அவை சார்ந்த தகவல்கள் எப்படி, எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதனைக் கொண்டிருக்கின்றன.

பொதுவான சில பைல் சிஸ்டங்கள்

  1. FAT32:
    இந்த வகை பைல் சிஸ்டம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மிகப் பழைய வகை பைல் சிஸ்டத்தினைச் சேர்ந்ததாகும். கம்ப்யூட்டர்களில் இணைத்து பயன்படுத்திப் பின்னர் எடுத்துச் செல்லக் கூடிய சிறிய அளவிலான மீடியாக்களில், இந்த வகை பைல் சிஸ்டம் இன்னும் பயன்படுத்தப் படுகிறது. மிகப் பெரிய கொள்ள்ளவிலான, 1 TB, மீடியாக்கள் NTFS பைல் சிஸ்டத்தில் பார்மட் செய்யப்பட்டு கிடைக்கின்றன. இந்த வகை பைல் சிஸ்டத்தினை, சிறிய அளவிலான ஸ்டோரேஜ் மீடியாக்களில், அல்லது டிஜிட்டல் கேமராக்கள், செட் டாப் பாக்ஸ்கள், மற்றும் கேம் சாதனங்களில் ஒத்த வகைக்காகவும், என்.டி.எப்.எஸ். வகை சப்போர்ட் செய்யப்படாமல் உள்ள மீடியாக்களிலும், FAT32 பைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.
  2. NTFS:
    விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில் எக்ஸ்பிக்குப் பின்னால், ட்ரைவ் பிரிப்பதற்கு NTFS பைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. வெளியில் இருந்து இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் ட்ரைவ்கள், FAT32 அல்லது NTFS பைல் சிஸ்டத்தால், பார்மட் செய்யப்படுகின்றன.
  3. HFS+:
    ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர்களில் உள்ளாகவும், வெளியே இணைத்துப் பயன்படுத்தும் ட்ரைவ்களை HFS+ பைல் சிஸ்டம் கொண்டு பிரிக்கின்றன. ஆனால், மேக் சிஸ்டங்கள் வழியாக, FAT32 சிஸ்டத்திலும் எழுதலாம். இதில் NTFS பைல் சிஸ்டத்தில், பைல்களில் எழுத வேண்டும் என்றால், அதற்கான தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்த வேண்டும்.
  4. Ext2, Ext3, மற்றும் Ext4:
    லினக்ஸ் குறித்துப் பேசுகையில், Ext2, Ext3, மற்றும் Ext4 என்ற பைல் சிஸ்டங்கள் குறித்து கேட்டிருப்பீர்கள். Ext2 என்பது மிகப் பழைய பைல் சிஸ்டம். இந்த பைல் சிஸ்டத்தில் எழுதுகையில், மின் தடை ஏற்பட்டு எழுதுவது நின்று போனால், டேட்டா அனைத்தும் கெட்டுப் போய், மீட்டு எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும். இந்த பிரச்னை இல்லாத வகையில் Ext3 பைல் சிஸ்டம் உருவானது. ஆனால், இதன் செயல் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. Ext4 பைல் சிஸ்டம் அண்மைக் காலத்தில் உருவான நவீன பைல் சிஸ்டமாகும். விரைவாகச் செயல்படக் கூடியது. இப்போது பயன்படுத்தப்படும் அனைத்து லினக்ஸ் சிஸ்டங்களிலும், இதுவே மாறா நிலையில் உள்ள பைல் சிஸ்டமாக உள்ளது. லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் FAT32 மற்றும் NTFS பைல் சிஸ்டங்களில் எழுதவும், அதில் அமைந்த டேட்டாவினைப் படிக்கவும் திறன் கொண்டதாகும்.
  5. Btrfs — “better file system”:
    லினக்ஸ் சிஸ்டத்தின் புதிய பைல் சிஸ்டமாகும். இது இன்னும் வடிவமைக்கப்படும் நிலையிலேயே உள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் பெரும்பாலான லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இது மாறா நிலை பைல் சிஸ்டமாக இல்லை. ஆனால், விரைவில் Ext4 பைல் சிஸ்டம் இடத்தினை இது பிடித்துவிடும். மிக அதிக அளவில், டேட்டாவினை ஸ்டோர் செய்திட இந்த பைல் சிஸ்டம் வழி தரும்.
  6. Swap:
    லினக்ஸ் சிஸ்டத்தில் இந்த ”Swap” பைல் சிஸ்டம் ஒரு பைல் சிஸ்டமே அல்ல. இதன் அடிப்படையில், ட்ரைவில் பார்ட்டிஷன் உருவாக்கிய பின்னர், இதனை ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்குத் தேவையான போது பயன்படுத்திக் கொள்ளும். இதனால், இதற்கென தனியே ஒரு பார்ட்டிஷனை, லினக்ஸ் சிஸ்டத்தில் உருவாக்க வேண்டியதுள்ளது.

இன்னும் பல பைல் சிஸ்டங்கள் இருந்தாலும், மேலே கூறப்பட்டவையே, பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். அப்போதுதான், ஏன் ஒரு பைலை ஒரு குறிப்பிட்ட சிஸ்டத்தில் படிக்க முடியவில்லை போன்ற கேள்விகளுக்கு, அவர்களே விடை தெரிந்து கொள்வார்கள்.

வேலை வேண்டுமா? நிறுவனங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

em
கடந்த 10 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் பலரது ஒருமித்த பதிலாக உள்ளது.அதே எதிர்பார்ப்புகள் தான் பொதுவாக அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றன. உற்பத்தி துறைக்கும், தகவல் தொழில்நுட்ப துறைக்குமான வேறுபாடு பார்த்தோமேயானால் அடிப்படை சாராம்சத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் படித்து முடித்து வேலை தேடும் பட்டதாரிகளிடம் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்…

* பாசிட்டிவ் எனர்ஜி:

எந்தவொரு நிறுவனமும் நேர்காணலில் ‘ஆடிட்யூட்டுக்கு’ அதிக முக்கியத்துவம் தருகின்றன. எந்தளவுக்கு நிறுவனத்திற்கு பாசிட்டிவ் ஆக இருப்பார் என்பதை சில கேள்விகள் மூலம் சோதிப்பார்கள். உதாரணமாக வேலைக்கான நேர்காணலில் வெளியூர்களில் வேலை செய்யத் தயாரா என்று கேட்கப்படலாம். அந்த நிறுவனத்திற்கு சென்னையில் தேவை இல்லாமல் இருக்கலாம். உண்மையில் பெங்களூரில் ஆட்கள் தேவைப்படலாம்.

அப்போது ‘ நான் சென்னையில் மட்டும் தான் வேலை செய்வேன்’ என்று கூறும் பட்சத்தில் அவர் தனக்கான வாய்ப்பை குறைத்துக் கொள்கிறார். அதே நபரிடம் வெளிநாடுகளில் வேலை செய்ய தயாரா? கேட்டால் உடனடியாக தயார் என்று சொல்லக்கூடும். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘குளோபலி பிளக்சிபில் லோக்கலி இம்மொபைல் என்று சொல்வார்கள்.

* நிலைத்து நிற்பாரா?

ஒருவர் எத்தனை நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வார் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு, பெரும்பாலானோர் ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் வேலை செய்தனர். அரசுத் துறைகளில் இந்த நிலை மிக அதிகம் என்றாலும் தனியார் துறையிலும் அதிகமாக காணப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய ஆய்வின்படி சராசரியாக 5 முதல் 8 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்பட்டது.

அதே தற்போதைய ஆய்வின்படி ஒருவர் 2 முதல் 3 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வது பெரிய விஷயமாக இருக்கிறது. எனவே, குறைந்த ஆண்டுகளே வேலை செய்வார் என்று தோன்றும் பட்சத்தில் அவரை தேர்வு செய்ய நிறுவனங்கள் யோசிக்கும். நிரந்தரமாக வேலை செய்பவர்களையே இன்றைய நிறுவனங்கள் அதிகம் எதிர்பார்க்கின்றன.

* துறை சார்ந்த அறிவு:

கல்லூரியில் எந்த பிரிவு படித்திருந்தாலும் அந்த துறையில் உங்களுக்கு ஆழ்ந்த அறிவு உள்ளதா? என்பதை நிறுவனங்கள் எதிர்பார்க்கும். புரிதல் இல்லாமல் மனப்பாடம் செய்து முதல் மதிப்பெண் பெற பள்ளி கல்வியில் முடியும். ஆனால், கல்லூரியில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படியே தேர்வாகினாலும் எந்த ஒரு வேலைக்கான நேர்காணலிலும், புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதில்லை. செயல்முறைத்திறன் அடிப்படையிலேயே உங்களுக்கு வேலை கிடைக்கும்.

* தீர்வு காணும் திறன்:

பொறியியல் சிவில், மெக்கானிக்கல், ஐ.டி, இ.சி.இ, இ.இ.இ என எந்த பிரிவை படித்தவராக இருந்தாலும் சிறந்த ‘ ப்ராப்ளம் சால்விங் ஸ்கில்’ ‘லாஜிக்கல் அண்ட் அனலயிட்டிக்கல் திங்கிங்’ திறன்களை நிறுவனங்கள் கட்டாயம் எதிர்பார்க்கின்றன. நேர்முகத் தேர்வில் ஒரு தர்க்கத்தை கொடுத்து முன்னுரிமை அடிப்படையில் வரிசையாக அதற்கு தீர்வு அளிக்க முடிகிறதா? என்பதும் பரிசோதிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் நமது சமயோசித அறிவும், திறமையும் இணைந்த செயல்பட்டால் நம்மால் அந்த நேர்முகத்தேர்வை எளிதில் வெற்றி பெற முடியும்.

* குழுவாக செயல்படும் திறன்:

மாணவர்களுக்கு குழுவாக செயல்பட சில கல்லூரிகள் மட்டுமே போதிய பயிற்சி அளிக்கின்றன. ‘மாணவிகளிடம் பேசக்கூடாது’ என்று கூறும் கல்லூரிகள் இன்றளவும் உள்ளன.ஆனால், பொதுவாக நிறுவனங்களில் இருபாலரும் இணைந்து ஒரு குழுவாக செயல்பட வேண்டியது அவசியம். ‘தனிமனிதனாக வெற்றி பெற்று விட்டேன் அனால், குழு தோற்று விட்டது’ என்றாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காது. எனவே, குழுவாக இணைந்து செயல்படும் திறன் உங்களிடம் உள்ளதா? அனைவரிடமும் சகஜமாக பழக முடிகிறதா? என்பதை நிறுவனங்கள் தெளிவாக பரிசோதிக்கும்.

* தொடர் கற்றல்:

ஒரு மருத்துவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தை இன்றும் பயன்படுத்தி சிகிச்சை அளித்து கொண்டிருந்தால் அவர் ஒதுக்கப்படுவார். எந்த துறையாக இருந்தாலும் துறை சார்ந்த தொடர் கற்றல், நவீன அறிவு ஆகியவை அவசியம். இவையும் நேர்முகத் தேர்வில் பரிசோதிக்கப்படும்.

* தகவல் தொடர்பு திறன்:

இன்றும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் ‘கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்’ அனைத்து திறன்களும் உங்களுக்கு இருந்தாலும் அவற்றை மற்றவருக்கு அழகாக வெளிப்படுத்த பேச்சுத்திறமை அவசியம். தகவல் தொடர்பில் ஆங்கிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

( மாணவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் ‘கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்’ அனைத்து திறன்களும் உங்களுக்கு இருந்தாலும் அவற்றை மற்றவருக்கு அழகாக வெளிப்படுத்த பேச்சுத்திறமை அவசியம். தகவல் தொடர்பில் ஆங்கிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மொபைல் போன் வாங்கும் முன்

mp

மொபைல் போன் ஒன்றை வாங்கும் முன் அதன் பல கட்டமைப்பு வசதிகள் குறித்து மற்ற போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் பரவி வருகிறது. இதில் முக்கியமாக போனில் உள்ள ப்ராசசரின் இயக்க தன்மைகள் குறித்து நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அந்த வகையில், மொபைல் போன் நிறுவனங்களும், தங்கள் போனில் உள்ள ப்ராசசர் குவாட் கோர் அல்லது ஆக்டா கோர் (நான்கு கோர் மற்றும் எட்டு கோர்) வேகத்தன்மை உடையது என்று அறிவிக்கின்றனர். நாம், உடனே, நான்கைக் காட்டிலும், எட்டுதானே அதிக மதிப்புடையது என்ற எண்ணத்தில், ஆக்டா கோர் ப்ராசசரே சிறந்தது என்ற முடிவிற்கு வருகிறோம். இது அனைத்து போன்களுக்கும் பொருந்தாது. இதன் அடிப்படையில் ப்ராசசரின் இயக்க தன்மை குறித்து முடிவெடுப்பது தவறாகும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

தொழில் நுட்ப விவகாரங்கள் என்றைக்கும் நம்மை குழப்பத்தில் ஆழ்த்துவதாகவே உள்ளன. எனவே, வியாபாரத்தில் உள்ள ஒரு நிறுவனம், தொழில் நுட்ப விஷயங்களை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர் ஒருவர், என்ன வாங்குவது என்ற முடிவினைச் சரியாக எடுக்க முடியும். “அதிக எண்ணிக்கையில் தரப்படுவதுதான் சிறந்தது” என்பது எந்த ஒரு சராசரி மனிதனும் எண்ணக் கூடியதே. ஆனால், அது எல்லா நேரத்திலும் சரியாக இருக்காது. கேமராவைப் பொறுத்தவரை, இதே போல மெகா பிக்ஸெல் திறன் குறித்து கணிக்கிறோம். ஒரு கேமராவின் மெகா பிக்ஸெல் திறன் அதிகமாக இருப்பதாலேயே, அதன் வழி எடுக்கப்படும் படங்கள், மிகச் சிறந்தவையாக இருக்கும் என்ற முடிவிற்கு வர முடியாது.

அதே போல, அதிக கோர் இயக்கம் இருப்பதாலேயே ஒரு ப்ராசசர் மிகச் சிறந்ததாக இருக்க முடியாது. ப்ராசசர் ஒன்றில் ஒவ்வொரு கோர் பகுதியும், ஒரு மையச் செயலகமாகச் செயல்படும். அதனால், அதிக எண்ணிக்கையில் கோர் பகுதியை ப்ராசசரில் இணைப்பதால், அது வேகமாகச் செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. அனைத்து கோர் பிரிவுகளும் இயங்கும் வகையில், சாப்ட்வேர் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டிருந்தாலே, அது சிறந்ததாகவும் வேகமாகவும் செயல்பட வழி தரும். எடுத்துக் காட்டாக, எட்டு சமையல்காரர்கள் ஒரு குறிப்பிட்ட உணவினைத் தயாரிப்பதில் ஈடுபட்டால், அனைவரின் சக்தியும், அந்த உணவினைத் தயாரிப்பதில் ஈடுபடும் வகையில் நாம் அவர்களை நிர்வாகம் செய்திட வேண்டும். இல்லை எனில், பலரின் உழைப்பின் பலன் அந்த உணவின் தயாரிப்பில் இருக்காது.

எட்டு கோர் ப்ராசசரின் செயல் தன்மையைப் பல காரணிகள் நிச்சயிக்கின்றன. அந்த ப்ராசசரின் செயல் வேக இடைவெளி, (frequency), அனைத்து கோர் இயக்கங்களையும் திறமையாகச் செயல்படுத்தும் சாப்ட்வேர், சிப் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு ஆகிய அனைத்தும் இணைந்தே ப்ராசசரின் செயல் தன்மையை உறுதி செய்கின்றன.

இவற்றில், ப்ராசசர் ஒன்றின் செயல் தன்மையை முழுமையாகப் பெறவிடாமல் கெடுப்பது அதனை இயக்கும் சாப்ட்வேர் தொகுப்பாகத்தான் இருக்கும். எடுத்துக் காட்டாக, மொபைல் சாதனங்களில் இயக்கப்படும் விளையாட்டுகளை எடுத்துக் கொண்டால், அந்த கேம் இயங்க இயக்கப்படும் சாப்ட்வேர், எட்டு கோர் பிரிவுகளையும், ஒரே நேரத்தில் முழு திறனையும் காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அனைத்து கேம்ஸ்களிலும் இது போல அமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்க முடியாது. அது போலவே, அனைத்து அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும், ப்ராசசர் சிப் ஒன்றின் எட்டு பிரிவுகளையும் வேலை வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

மொபைல் போன்களுக்கான ப்ராசசர் சிப்கள் பெரும்பாலும் ஏ.ஆர்.எம். (ARM) நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. ஏனென்றால், இந்நிறுவனம் Qualcomm, Samsung, NVIDIA, and Mediatek போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்நிறுவனங்களுக்கு சிப் எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும் என்பதனை வழங்கி அதற்கேற்ப சிப்களைத் தயாரிக்க அனுமதி கொடுத்து பெற்றுக் கொள்கிறது. அடுத்த இடத்தில் இருப்பது இண்டெல். ஏ.ஆர்.எம். நிறுவனம் தான், முதன் முதலில், இரண்டு குவாட் கோர் ப்ராசசர்களை (மொத்தத்தில் எட்டு) கொண்டு சிப் வடிவமைப்பதில் ஈடுபட்டது. இவற்றில் ஒரு குவாட் கோர் பிரிவு அதிக பட்ச செயல் திறன் தர பயன்படுத்தப்படும். இன்னொரு குவாட் கோர் பிரிவு, பேட்டரி, உஷ்ணம் போன்றவற்றைக் கண்காணிக்கும்.

பொதுவாக இந்த இரண்டு குவாட் கோர் பிரிவுகளும் தனித்தனியே தான் செயல்படும். இன்றைக்கு சந்தைக்கு வரும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள். ஏ.ஆர்.எம். தந்த கட்டமைப்பில் குவால்காம், சாம்சங், மீடியாடெக் போன்ற நிறுவனங்கள் தயாரித்த சிப்களுடன் தான் நமக்குக் கிடைக்கின்றன. அசூஸ் மற்றும் லெனோவா போன்ற, இண்டெல் நிறுவனத்துடன் தாங்கள் தயாரிக்கும் கம்ப்யூட்டர்களுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே, இண்டெல் நிறுவனத்தின் ப்ராசசர்களைப் பயன்படுத்துகின்றன. இண்டெல், குவாட் கோர் ப்ராசசர்களுடன் நிறுத்திக் கொண்டது. ஏ.ஆர்.எம். நிறுவனம் இரண்டு குவாட் கோர் அடங்கிய ப்ராசசர்களைக் கொண்டுள்ளது. இண்டெல் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு, தனியே ஒரு அமைப்பில் வடிவமைக்கப்பட்ட ப்ராசசர்களைக் கொடுத்து வருகிறது.

எனவே, ஆக்டா மற்றும் குவாட் கோர் ப்ராசசர்களிடையே செயல் திறன் வேறுபாடு அவை குறிப்பிடும் எண்களில் இல்லை. அதனால் தான், சில மொபைல் நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள ப்ராசசர் சிப் குறித்து குறிப்பிடுகையில், அவை “உண்மையான ஆக்டா கோர் (“True octacores”,)” எனக் குறிப்பிடுகின்றன. அப்படிக் கூறுவதன் மூலம், தங்களுடைய சிப்களில், எட்டு கோர் பிரிவுகளும் முழுமையான சக்தியைத் தரும் வகையில் இயக்கப்படுவதாக அறிவிக்கின்றன. ஆனால், இதில் என்ன வேடிக்கை என்றால், பெரும்பாலான அப்ளிகேஷன்கள் முழுமையான பலன் தரும் வகையில் இயங்க, எட்டு கோர் பிரிவுகளும், ஒரு ப்ராசசரில் இயங்கத் தேவை இல்லை என்பதே. அண்மையில் வந்திருக்கும் சில ஆண்ட்ராய்ட் விளையாட்டுகள் கூட குவாட் கோர் ப்ராசசர்களில் சிறப்பாக இயங்குகின்றன. ஆனால், இவை இயங்க நல்ல கிராபிக்ஸ் ப்ராசசர் துணை இருக்க வேண்டும்.

குவாட் மற்றும் ஆக்டா கோர் ப்ராசசர்களுக்கிடையே உண்மையிலேயே இயக்க திறன் வேறுபாடு உள்ளதா என்ற சர்ச்சை இருந்தாலும், இந்த மாயத் தன்மையை பல மொபைல் போன் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களைக் கவர பயன்படுத்திக் கொள்கின்றன என்பதே உண்மை. எனவே, வாங்க இருக்கும் மொபைல் போன் திறனை, அதன் ஆக்டா அல்லது குவாட் கோர் ப்ராசசரைக் கொண்டு மட்டும் முடிவு செய்திட வேண்டாம். மற்ற வசதிகளைத் தரும் ஹார்ட் வேர் பாகங்களும் முக்கியமானவையே. எனவே, மொத்த செயல் திறனைக் கொண்டு தான், மொபைல் போன் ஒன்றை எடை போட வேண்டும்.

இப்போதெல்லாம், இணைய தளங்களில், பலர் மொபைல் போன் திறன் குறித்தும், குறிப்பிட்ட போன் ஒன்றை, அதே ஹார்ட்வேர் அமைப்பில் உள்ள மற்ற போன்களுடன் ஒப்பிட்டும் தகவல்களைப் பதிந்து வழங்குகின்றனர். இவற்றைப் படித்து நாம் மொபைல் போன் ஒன்றின் திறனை முடிவு செய்திடலாம்.

எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா?

fb

உங்களின் ஃபேஸ்புக் புரொஃபைலில் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணை, ஃபேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே, உங்களின் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தவும் கூடும். ஃபேஸ்புக்கின் தேடுதல் பட்டியில் மொபைல் எண்ணைக் கொடுத்தாலே போதும். யார் வேண்டுமானாலும் உங்களின் முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும்.

டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவரான ரெசா மொயாண்டின் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில், சாத்தியமான எண்கூட்டை அமைக்க ஒரு நிரல் எழுதினார். அதில் கிடைத்த எண்களை அனைத்தையும், ஃபேஸ்புக் நிரலி உருவாக்க மென்பொருளுக்கு அனுப்பினார். உடனே ஆயிரக்கணக்கான தனிநபர்களின் சுய விவரங்கள் தடையில்லாமல் வந்து குவிந்திருக்கின்றன.

இந்த பாதுகாப்பு ஓட்டையின் காரணமாக, கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்தவர்கூட, பொதுவெளியில் தங்கள் மொபைல் எண்களைப் பதிவேற்றியிருக்கும் ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருடமுடியும்; பின்னர் அதையே மற்ற நிறுவனங்களுக்கு விற்கவும் முடியும். கடந்த ஏப்ரலில் ஃபேஸ்புக்கிடம் இப்பாதுகாப்புப் பிரச்சனை குறித்துத் தெரிவித்த பின்னரும், அந்த ஓட்டைகள் அடைக்கப்படாமல்தான் இருக்கின்றன. இதன் மூலம் கிட்டத்தட்ட 15 லட்ச ஃபேஸ்புக் பயனாளிகள், தங்களின் தகவல்கள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர், என்று மொயாண்டின் கூறினார்.

சென்ற வருடத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி, ராண்ட் கார்ப்பரேஷனின் தேசிய பாதுகாப்பு பிரிவு சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தனிநபர்களின் புகைப்படங்கள், பெயர்கள், தொலைபேசி எண்கள், கல்வித் தகவல் மற்றும் வசிக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் இருக்கும் சட்டவிரோதமான வணிக தளங்களால் திருடப்படுகின்றன. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள், திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைக் காட்டிலும் அதிகம் உபயோகமானவை என்கிறது ராண்ட் நிறுவன ஆய்வு.