சுவாசத்தை கவனித்தல் என்பது இயற்கையான தியான முறை

கலைகளிலேயே முதன்மையானதும் சிறப்பானதும் இந்த சரகலைதான் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு.
காலை எழுந்தது முதல் இரவு உறங்கப்போகும் வரை
உங்களுக்கும், உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் என்ன நடக்கப் போகின்றது என்பதை இந்த சரகலையை கொண்டு 100%
சரியாக கணித்துவிடலாம்.
உங்களிடம் ஒருவர் நல்லதுக்காக வருகிறாரா??
அவர் பேசுவது உண்மையா??
இந்த நாள் உங்களுக்கு எப்படி போகும்??
காரியம் வெற்றி பெருமா??
எனஅனைத்தையும் துள்ளியமாக கணித்துவிடலாம்.
சரம் என்றால் சுவாசம் என்று பொருள்.

பொதுவாக நமது சுவாசம் மூன்று விதமாக இயங்குகின்றது.
அதாவது சுவாசம் இடது பக்கமாக ஓடினால் இடகலை அல்லது
சந்திரகலை என்றும்,
வலது பக்கமாக ஓடினால் பின்கலை அல்லது சூரியகலை என்றும்,

இரண்டிலும் ஓடினால் சுழுமுனை என்று கூறுவர்.
இந்த சுழுமுனை சுவாசம் ஓடினால் எந்த வேலையும் செய்யாமல் தியானத்தில் மட்டும் அமர்ந்திருப்பதே நல்லது, மற்ற
வேலைகள் செய்தால் நடக்காது.
சுவாசம்வலது பக்கமாக ஓடினால் உடலால் செய்யும் கடினமான வேலைகளை செய்வது சிறந்தது.

சுவாசம் இடது பக்கமாக ஓடினால் மனதால் செய்யும் வேலையே சிறந்தது.
மேலும்சுவாசம் எந்த பக்கம் ஓடுகின்றதோ அதை பூரணம் என்றும்,
சுவாசம் ஓடாத பக்கம் சூனியம் என்றும் வகுத்துள்ளனர்.

உதாரணத்திற்கு உங்களுக்கு வலது பக்கம் சுவாசம் ஓடுகின்றது என்று வைத்து கொண்டால், வலது பக்கத்தை பூரணம் என்றும், சுவாசம் ஓடாத இடது பக்கத்தை சூனியம் என்று பொருள் கொள்ள வேண்டும்.

சரமாகிய சுவாசம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தில் தொடங்க வேண்டும் என்ற விதியுள்ளது.
அது யாதெனில் திங்கள், புதன், வியாழன்(வளர்பிறை), வெள்ளி ஆகிய நாட்களில் சுவாசம் இடது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும்.
அதே போல் செவ்வாய், வியாழன்(தேய்பிறை), சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுவாசம் வலது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும்.
ஒரு வேலை அந்த நாளுக்குரிய சரம் ஓடாமல் வேறு சரம்
ஓடினால் நோய், பொருள் இழப்பு, மனக்கஷ்டம் போன்றவை ஏற்படும்.
உதாரணதிற்கு திங்கள் அன்று சுவாசம் இடது பக்கம் தொடங்காமல் வலதில் தொடங்கினால் நோய் உண்டாகும்.

ஒருவருடைய சரம் சரியாக இயங்குகின்றது என்பதை எப்படி கண்டுணர்வது என்றால், காலையில் கண்விழித்த உடனே உங்களது சரம் (சுவாசம்) அந்நாளுக்குரிய சரத்தில்
ஓடுகின்றதா?? என்று கவனியுங்கள்.

அப்படிஓடினால் அந்நாள் உங்களுக்கு நன்மையான நாள்.
உதாரணதிற்கு திங்கள் அன்று கண்விழித்த உடனே உங்கள் சுவாசத்தை கவனித்தால் இடதுபக்கத்தில் ஓடி கொண்டிருக்க வேண்டும்.
அதற்கு பிறகு சுவாசம் எந்த பக்கம் வேண்டுமானாலும்
மாறிக்கொள்ளலாம். தவறில்லை.
ஆனால்அப்படி ஓடாமல் திங்களன்று சூரியனுக்குரிய
வலதுகலையில் தொடங்கினால் நோய் ஏற்படுவது 100% உறுதி.
எழுந்தஉடனேசுவாசத்தை கவனித்துசரத்தைமாற்றகற்றுக் கொண்டால்நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்
அக்காலத்தில் முனிவர்கள் கையில் தண்டம் என்ற ஒன்றை வைத்திருப்பார்கள்.

அதுஇந்தசுவாசத்தை மாற்ற உதவும் கருவியே தவிர
வேறு ஒன்றுமில்லை.
சுவாசத்தை எப்படி மாற்ற வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள் உண்டு. அவை,

1. படுக்கையிலிருந்து எழும்போது எந்த காலை முதலில் தரையில் அழுத்தி ஊணுகின்றீர்களோ அந்த பக்கம் சுவாசம்
மாறிக்கொள்ளும்.

2. படுக்கையிலிருந்து எழாமல் எந்த பக்கம் ஓடவேண்டுமோ அதற்கு எதிர் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டு சுவாத்தை கவனிக்க வேண்டும்.
உதாரணதிற்கு வலது பக்கம் சரம் ஓடவேண்டும் என்று வைத்துக் கொள்வோம், உடனே இடது பக்கமாக திரும்பி படுத்து, இடது கையை மடித்து தலைக்கு கீழே வைத்து, கால்களை நீட்டி வலது கையை வலது தொடை மீது வைத்துக்கொண்டு உங்கள் சுவாசத்தை கவனித்தால், தானாகவே சுவாசம் வலது கலைக்கு மாறிக்கொள்ளும்.

3. அல்லது நிமிர்ந்து உட்கார்ந்து இடது தொடை மீது வலது காலைப் போட்டு உட்கார்ந்தால் சுவாசம் வலதில் மாறியோடும்.
இதுவே கால்மேல் கால் போட்டு உட்காரும் முறை. ஷிரடி பாபா படத்தை பார்த்தால் புரியும்.

4.அல்லது உட்காரும்போது இடது கையை தரையில் அழுத்தி சற்று இடது பக்கம் சாய்ந்தவாறு உட்கார்ந்தால் சரம் வலதில்
மாறியோடும்.

5.அல்லது இடது அக்குலில் ஒரு கணமான துண்டை மடித்து வைத்து கொண்டால், சுவாசம் வலதில் மாறிக்கொள்ளும்.
இவை அனைத்தும் சூரிய உதயத்திற்கு 20 நிமிடத்திற்கு முன்போ அல்லது உதயத்திற்கு பின் 20 நிமிடத்திற்கு உள்ளாகவோ செய்து
கொண்டால் கூட போதுமானது.
பிரம்மமுகூர்த்தத்தில் செய்தால் மிக்க பயன் உண்டு, அதாவது சூரிய உதயத்திற்கு 1 1/2 (4.30 A.M)மணி நேரத்திற்கு முன் உள்ள காலம்.

சுவாசத்தை கவனித்தல் என்பது இயற்கையான தியான முறையாகும். எனவே இதில் தியானமும் அடக்கம். புத்தரின் விபாசான சுவாசத்தை என்னேரமும் கவனித்தலே ஆகும்.

இப்படி கவனிப்பதால் சரம் இடம், வலம், சுழுமனை என மாறுவதை கவனிக்க முடியும்.

Leave a comment