கிரெடிட் கார்டுக்கு இரட்டை வரி இல்லை


ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், கிரெடிட் கார்டுகள் மூலம் செலவழிப்பதற்கு இரட்டை வரி விதிக்கப்படும் என்பது வெறும் புரளி; வதந்தி. இதை நம்ப வேண்டாம் என மத்திய அரசும், வங்கிகளும் தெளிவுப்படுத்தி உள்ளன.

அதிகாரிகள் விளக்கம்:

இது குறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஹாதியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், 

‘ கிரெடிட் கார்டு மூலம் செலவழித்தால், இரண்டு முறை ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் தகவல் பொய்யானது.
 இதுபோன்ற தகவல்களின் உண்மைதன்மையை சரி பார்க்காமல், மற்றவர்களுடன் பகிர வேண்டாம்’ என, குறிப்பிட்டுள்ளார். 

தேசிய பண பட்டுவாடா கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.பி.ஹோடா கூறுகையில், ” இரட்டை வரி குறித்த தகவல்கள் அனைத்தும் பொய். முன்பு சேவை வரி என, 15 சதவீதம் வசூலிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி.,யில் அது, 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த தொகையையும் நுகர்வோர் செலுத்த வேண்டாம். வங்கிக்கு வியாபாரி தான் செலுத்த வேண்டும். 

இந்த வரி சுமையை நுகர்வோர் மீது செலுத்த கூடாது என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது,” என்றார்.