கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!)

*ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்…*

உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிக ஆழமான பரந்த பொருளை கொண்டவை.

⚜ *சுவாமி விவேகானந்தர் :* நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?

🙌 *இராமகிருஷ்ண பரமஹம்சர் :* துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.

⚜ *சுவாமி விவேகானந்தர் :* நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?

🙌 *இராமகிருஷ்ண பரமஹம்சர் :* உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)

⚜ *சுவாமி விவேகானந்தர் :* அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?

🙌 *இராமகிருஷ்ண பரமஹம்சர் :* ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.

⚜ *சுவாமி விவேகானந்தர் :* கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை….

🙌 *இராமகிருஷ்ண பரமஹம்சர் :* வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)

⚜ *சுவாமி விவேகானந்தர் :* சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?

🙌 *இராமகிருஷ்ண பரமஹம்சர் :* செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.

⚜ *சுவாமி விவேகானந்தர் :* கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?

🙌 *இராமகிருஷ்ண பரமஹம்சர் :* எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.

⚜ *சுவாமி விவேகானந்தர் :* இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?

🙌 *இராமகிருஷ்ண பரமஹம்சர் :* துன்பப்படும்போது “எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.

⚜ *சுவாமி விவேகானந்தர் :* வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?

🙌 *இராமகிருஷ்ண பரமஹம்சர் :* உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.

⚜ *சுவாமி விவேகானந்தர் :* கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.

🙌 *இராமகிருஷ்ண பரமஹம்சர் :* கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல. எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும்.

🍀🌼🍀🌼🍀🌼

வாழ்க வளமுடன்…..

Orginal Driving Licence (ஓட்டுநர் உரிமம் அசல்)

Orginal Driving Licence (ஓட்டுநர் உரிமம் அசல்) எப்பொழுதும் ஓட்டுனரிடம் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு பதில்….
.
பரிசோதிப்பவர்களிடம் இன்டர்நெட் வசதியுடன் ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கும் கருவியை கொடுப்பதே இந்திய நாட்டிற்கு உகந்ததாகும்
.
Instead of asking the drivers to keep the original driving license, Inspectors can keep the device with internet facility to check

திருச்செந்திலாண்டவர் வெற்றி வேர் அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளிய அற்புத காட்சி… இதைக் காண்பவர்கள் வாழ்வில் அனைத்துமே வெற்றி…வெற்றி…வெற்றி.

http://bit.ly/2vloN5r
via IFTTT

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

7வது இடம்

2 )  இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

23 வது இடம்

3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

16வது இடம்

4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

15வது இடம்

5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

14வது இடம்

6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?

மதுரை

7 )  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

2004

8 )  தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?

72993

9 )  தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?

சென்னை

10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

1076 கி.மீ

11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது

1986

12 )  தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?

கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?

சென்னை (23,23,454)

14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

சென்னை (46,81,087)

15 )  தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

68.45 ஆண்டுகள்

16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?

13 மாவட்டங்கள்

17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

234

18 )  தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

1

19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?

12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன

20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?

சென்னை

21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

71.54 ஆண்டுகள்

22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

15979

23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

561

24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

146

25 )  தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

18

26 )  தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

39

27 )  தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?

தர்மபுரி (64.71 சதவீதம்)

28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

பெரம்பலூர் 5,64,511

29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்? 

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)

31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?

3,74,901

32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?

32

33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?

அரியலூர்

34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?

திருப்பூர்

35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்

80.33 சதவீதம்

36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?

17.58 சதவீதம்

37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?

வரையாடு

38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?

சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது? 

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2.  கோவை
3. மதுரை 
4. திருச்சி   
5 தூத்துக்குடி 
6 சேலம்

41 )  தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?

999பெண்கள்(1000 ஆண்கள்)

42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. நீலகிரி         
2. சேலம்         
3. வேலூர்         
4. கன்னியாக்குமாரி

43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. திருவாரூர்     
2. இராமநாதபுரம் 
3. தூத்துக்குடி     
4. கடலூர்

44 )  தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?

மதுரை (மேலக்கோட்டை – ஆண்டு 1997)

45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?

http://www.tn.gov.in

46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

சென்னை

47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?

ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

48 )  தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?

திருவில்லிபுத்தூர் கோபுரம்

49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?

கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?

நீராடும் கடலுடுத்த

51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?

பரத நாட்டியம்

52 )  தமிழ்நாட்டின் மாநில பறவை எது?

மரகதப்புறா

53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

பனைமரம்

54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?

செங்காந்தர் மலா்

55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

கபடி

56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?

1,30,058 ச.கி.மீ

57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

7,21,38,958              
ஆண் 36158871       
பெண் 35980087

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும்

சித்த வைத்திய முறை
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள்  அதிகரிக்கும், நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை  குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி  கொண்டது. எனவே இவைகள் மூலம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பது எப்படி?
பப்பாளி இலை சாறு: புதிதாக  பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர்  ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4  முறை அருந்த வேண்டும். பப்பாளி இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும்  ஆன்டி-கேன்சர் பொருட்கள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  எனவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் உடலில் உள்ள நோயை தடுக்கவும்  முடிகிறது. பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள்  நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.