டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும்

சித்த வைத்திய முறை
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள்  அதிகரிக்கும், நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை  குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி  கொண்டது. எனவே இவைகள் மூலம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பது எப்படி?
பப்பாளி இலை சாறு: புதிதாக  பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர்  ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4  முறை அருந்த வேண்டும். பப்பாளி இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும்  ஆன்டி-கேன்சர் பொருட்கள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  எனவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் உடலில் உள்ள நோயை தடுக்கவும்  முடிகிறது. பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள்  நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Leave a comment