அறிவுத் திறன் மற்றும் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க உதவும் அற்புத ஆற்றல் மிக்க ஜூஸ் வல்லாரைக் கீரை ஜூஸ்

✅👌👍🇪🇬
உடலில் உண்டாகும் கொழுப்பு க்களை கரைக்கவும் , சிந்தனை , அறிவுத் திறன் மற்றும் ஞாபக சக்தி திறனை அதிகரிக்க உதவும் அற்புத ஆற்றல் மிக்க ஜூஸ்
வல்லாரைக் கீரை ஜூஸ்
தேவையான பொருட்கள்
வல்லாரைக் கீரை.         –  50 கிராம்
ரோஜா இதழ்கள்.           –   ஒரு கைப்பிடி
அமுக்கரா பொடி.           –   கால் தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள்.           –   கால் தேக்கரண்டி
தண்ணீர்.                    –   தேவையான அளவு
தேன்.                            –  தேவையான அளவு
செய்முறை…
வல்லாரைக் கீரையை நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து  பருகவும்.
பயன்கள்…. 
இந்த ஜூஸை குடித்துவந்தால் உடலில் உண்டாகும் கொழுப்பு கட்டிகளை கரைக்கும். சிந்தனை , அறிவுத் திறன் மற்றும் ஞாபக சக்தி மேலோங்கும் . இரத்த அழுத்தத்தை சமன்படுத்தும் , நல்ல சுறுப்பை உண்டாகும் ஆற்றல் மிக்க அற்புதமான ஜூஸ்.

யோகா என்றால் என்ன?

யோகா என்றால் என்ன? …

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை…

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை…

❗பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை…

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை…

❗அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
*பீஷ்மர்* மனம் கலங்கவில்லை…

❗இளம் விதவையான
சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை…

❗தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் *குசேலர்*
மனம் கலங்கவில்லை…

❗ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
*கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை…

❗பிறவிக் குருடனாக
இருந்தபோதிலும்
*சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை…

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை…

❗கணவன்
கஷ்டப்படுத்திய போதும்
*குணவதிபாய்* மனம் கலங்கவில்லை…

❗இருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
*சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை…

❗கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
*ஜயதேவர்* மனம் கலங்கவில்லை…

❗மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
*சஞ்சயன்* மனம் கலங்கவில்லை…

❗பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
*பூந்தானம்* மனம் கலங்கவில்லை…

❗கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
*தியாகராஜர்* மனம் கலங்கவில்லை…

❗நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
*மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை…

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
*கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை…

*எப்படி முடிந்தது இவர்களால்..?*

ரகசியம்…

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்…*

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

*ஆழ்ந்த நம்பிக்கை…*

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

*முதல் வழி…*
(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்…

*இரண்டாம் வழி…*
(சுய அறிவு)

மன அமைதியுடன்,
நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து… அப்போது ஏற்படுவது…

நம்பிக்கை ஏற்பட்ட பின்…

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக…

தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்…

அந்த பிரார்த்தனைகள்…

*மந்திரமாக இருக்கலாம்…*

*கீர்த்தனைகளாக இருக்கலாம்…*

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *”அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்…”* இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடைபிடித்தால்…
வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்…

என்ன நடத்தாலும்,
எதை இழந்தாலும்,
*”ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்…”*

அந்த ஆத்ம பலமே…
எதையும் தாங்கும் சக்தி…

ஆதலால் …

*உறுதியுடன் உண்மையாக இருப்போம்…*

இப்படிபட்ட மனதின் சமமான தன்மையே
யோகம் ஆகும். இந்த நிலையை அடைய உதவும் பயிற்சிகள் தான் யோகா என்று அழைக்கப்படுகிறது. மக்கள் நினைக்கும் உடல் சார்ந்த அசைவுகள் மட்டுமே யோகா அல்ல…..உள்ளம் மற்றும் உயிர் சார்ந்த அசைவுகள் நம்முள் ஏற்பட யோகா பயிற்சியை தொடர்ந்து பயில்வோம்…..

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

MJF.LN.DR.L.VELAYUTHAM. MBA.ML.Phd.

Why #Meditation is necessary from the #Medical_Science’s _point_of_view?

Why Meditation is  necessary from the Medical Science’s point of view?

From the time of the  birth till death the heart works continuously. Everyday the heart pumps 7000 litres of blood, of which 70% blood is pumped to the Brain and the remaining 30% to the rest of body.

How does the heart work so efficiently and effectively?

Heart works effectively because it follows a discipline. In normal conditions the heart takes 0.3 secs to contract {systole} and 0.5 secs to relax {diastole}.

So, 0.3 + 0.5 = 0.8 secs are required by the heart to complete one beat {1 cardiac cycle}.

That means in 1 min, the heart beats 72 times which is considered as normal heart beat.

During the relaxing phase of 0.5 secs the impure blood travels through the lungs and becomes 100% pure.

In some stressful conditions, the body demands more blood in less time and in this situation the heart reduces the relaxing period of 0.5 secs to 0.4 secs. Thus, in this case the heart beats 82 times in 1min and only 80% of blood gets purified.

On more and more demand the relaxing time is further reduced to 0.3 secs & then only 60% of blood is purified.

Imagine the consequences of the lesser Oxygenated blood circulating in our Arteries.

Deep Breathing is the key to ensure better Oxygenation of the blood.

Factors responsible for the activity of the brain :

1. 25% – 30% is due to the Diet we consume.

2. 70% – 75% is due to the emotions, attitude, memories and other processes of the brain.

Thus, to calm the brain and reduce the demand on the heart to pump more and more blood, brain needs to be given a rest.

Meditation is the most useful tool to calm an agitated mind.

When we sit with eyes closed and meditate, the brain gets calmer, heart gets rested, thus insulating us from the Diseases of Heart & Brain.

MEDITATION IS THE KEY TO THE REAL HEALING…
OUR ANCESTORS THOUGHT US THIS THOUSANDS OF YEARS BACK. HOW MANY KNOWS THIS REAL TRUTH ????

நம் பிரதமர் மோடியின் மாலைத் தீவு பயணம் எதனால்?

நம் பிரதமர் மோடியின் மாலைத் தீவு பயணம் எதனால்.

உலக வல்லரசு நாடுகளுக்கு செல்லாமல் சிறியத் தீவுக் கூட்டம் மாலைத்தீவுச் செல்லக் காரணம்.

மாலைத்தீவுகள் மொத்தம் 26 தீவுகளைக் கொண்டக் கூட்டம்
இந்த 26 தீவுகளையும் வானில் இருந்து பார்த்தால் இந்தியப் பெருங்கடலில் விழுந்து கிடக்கும் ஒரு பெரிய மாலை போல காட்சியளிப்பதால் தான் இந்த நாட்டிற்கு மாலைத்தீவுகள் என்று பெயர் வந்தது

மோடி அவர்களின் இப்பயணம் இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு வரலாற்றில் மிக முக்கியமானது என்று கூறினால் அது மிகையாகாது.

மோடிஜி நேற்று மாலைத்தீவு களின் பாராளுமன்றத்தில்
உரையாற்றினார்.

#மாலைத்தீவு_நாட்டின்_மிக #உயர்ந்த_விருதான
#நிஷான்_இசுதீன்
#விருது_மோடிஜிக்கு
#வழங்கப்பட்டது.

இதையெல்லாம் விட மாலைத்தீவு இனி இந்திய
ஆட்சியின் கீழ் உள்ள ஒரு பகுதி என்கிற அளவில் மாலைத் தீவுகளை இந்தியாவோடு இறுக்கி வைத்துள்ளது மோடிஜியோட மாலைத்தீவு பயணம்.

எவ்வாறு என்றால் மாலைத்தீவுகளின் 26 தீவுகளிலும் இந்திய ராடாரை நிறுவி அந்த 26 ராடார்களும்
ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு அந்த
நெட்வொர்க் இந்தியாவின் கடலோர ராடர்களோடு இணைக்கப்படுகிறது.
அவைகள் இந்திய ராணுவத்
தலைமையகத்துக்கு தகவல்கள் அனுப்பி வைக்கும்.

இந்த 26 தீவுகள் இந்தியப் பெருங்கடலில்  இந்தியாவிற்கு மேற்கே  உள்ளது இங்கு ராடார்களை நிறுவி உள்ளதால், மேற்கே பசிபிக் பெருங்கடல், அண்டார்டிகா பெருங்கடல் வழியாக வரும் அனைத்துக் கப்பல்களையும்,வான்வழி அனைத்து விமானங்களையும்  கண்காணிக்கும் அதனுடைய கண்ட்ரோல் கிழக்கே உள்ள இந்தியத்தீவுகள் கூட்டம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ராணுவத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கிழக்கே அந்தமான், மேற்கே மாலைத்தீவுகள் இந்தியப் பெருங்கடல் நம் வசம் நம்மை மீறி எந்த ஒரு வாகனமும் கடல்வழி, வான்வழியாகச் செல்பவை நம் ராடாரைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

சுருக்கமாக கூற வேண்டும் என்றால் மாலைத்தீவுகள் நம் லட்சத்தீவுகள் மாதிரி இந்தியாவின் ஒரு
பகுதியாக மாற்றப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

இதைவிட  மாலைத்தீவுகளில் இந்தியா ஒரு ராணுவதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாலைத்தீவுகளுக்கு இனாமாக ஒரு 1000 கோடி ரூபாயை அள்ளிக்
கொடுத்துள்ளார் மோடிஜி.

இதனால் மாலைத்தீவுகளில் இந்தியா ராணுவ தளம் அமைவது உறுதி. அது ரகசியமாகவா இல்லை வெளிப்படையாகவா என்று இன்னும் சில வருடங்களில் தெரிந்து விடும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடைபெற்று வரும் ஆதிக்கப் போட்டி.
மாலைத்தீவுகளை முன் வைத்து இந்தியாவும் சீனாவும் ஆடும்
ஆடு புலி ஆட்டம் எதற்காக?

மாலைத்தீவுகள் இந்தியாவின் தலைநகர் டெல்லி யில் இருந்து 2752 கிலோ மீட்டர் தொலைவில்
லட்சத்தீவுகளுக்கு தெற்கே இலங்கைக்கு தென்மேற்கே இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு தெற்காசியநாடு.
இந்தியப்பெருங்கடலில் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் எந்த ஒரு கப்பலும் மாலைத்தீவு வழியாகத்தான் இந்தியப் பெருங்கடலை கடந்து செல்ல முடியும்.

டிஜிபோதி என்று ஒரு குட்டி ஆப்பிரிக்க நாடு இருக்கின்றது இங்கு தான் சீனாவின் அதிகார ப்பூர்வமான மிகப்பெரிய கடற்படை தளம் இருக்கிறது.

ஆசிய கண்டத்தை சேரந்த சீனா ஏன் ஒரு ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்த நாட்டில் தன்னுடைய ராணுவ தளத்தை வைத்து இருக்கிறது என்று
நமக்கு தோன்றலாம்.

இந்தியா சீனா என்கிற இரு பெரிய ஆசிய கண்டத்து நாடுகளிடையே நடைபெற்று வரும் ஆதிக்கப் போட்டியும் பொருளாதாரப் போட்டியால்.

எதிர்காலத்தில் இந்தியாவோடு சீனா போர் புரிய நேரிட்டால் இந்தியாவின் முக்கிய நகரங்களை தரை வழியாகவோ இல்லை விமானங்கள் மூல மாகவோ சீனாவால் அழித்து விட முடியாது. மாறாகக் கடல்வழியாகத் தான் கடற்படயை வைத்தே இந்தியாவை சீனாவால் சிதைக்க முடியும்.அந்த
அளவிற்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நிலப்பரப்பு அமைந்துள்ளது.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் எங்கு இருக்கி றது என்றால் டிஜிபோதி நாட்டில் இருந்து மட்டுமே முடியும். ஏன் என்றால் சீனாவின் கடல் பிராந்திய
மான தென் சீனக்கடலில் வியட்நாமோடு கொண்ட ஒப்பந்தப்படி  இந்தியா
ஒரு சேட்டிலைட் கண்காணிப்பு மையத்தோடு கூடிய ஒரு துறைமுகத்தை அமைத்து கடற்படையை வைத்து சீனக் கப்பல்கள் வெளியே வரும் சீனாவின் ஒரே கடல்லழிப் பாதையை நம் கட்டுக்குள் கொண்டு வந்து சீனக் கப்பல்கள் நம்மை மீறி ஒரு இன்ச் நகர முடியாத அளவு செய்து உள்ளார் மோடிஜி.

வேறொரு நாடுகளின் தொடர்போடு அவர்கள் கப்பல் படையைக் கொண்டு தென் சீனக்கடலில் இருந்து மொலாக்
கா நீரிணைப்பு வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்து இந்தியாவை தாக்க நினைத்தால் இந்தியப் பெருங்கடலில் அந்தமான் அருகே இந்தியாவைத்து உள்ள மிகப்பெரிய ராணுவ தளத்தில்
இருந்து புறப்படும் கப்பல்கள் விமானங்கள் சீனாவின் வேற்று நாட்டுக் கடற்படையை மொலாக்கா நீரிணைப்பு
வாசலில் வைத்தே அழித்து விட முடியும்.

அதனால் தான் சீனா டிஜிபோதி நாட்டில் தன்னுடைய ராணுவ  தளத்தை வைத்து இருக்கிறது.
சரியாக கூற வேண்டும் என்றால் அரபிக்கடலின்  நுழை வாயிலான ஏடன் வளைகுடாவின் வாசலில் இருக்கும் டிஜி போதி நாட்டில் சீனாவின் ராணுவ தளம் இருக்கிறது.

அங்கிருந்து சீனாவுக்கு கடல் வழியாக  செல்ல வேண்டும் என்றாலும் ஆப்ரிக்க மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து சீனாவுக்கு செல்லும் சரக்கு  கப்பல்கள் மாலைத்தீவு வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் சீனாவுக்கு மாலைத்தீவு எப்பொழுதும் அதன் பிடியில் இருக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். இந்தியாவுக்கு மாலைத்தீவு தனக்கு அடக்கமாக  இருந்தால் இந்தியபெருங்கடல் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்..
.
இது இந்தியாவிற்கு மிக அருமையான நேரம்
அதனால் தான் மோடி இரண்டாவது முறையாக.
பதவியேற்ற உடனே மாலைத்தீவுகளுக்கு தான்
செல்கிறார் என்றால் மாலைத்தீவுகளின் நட்பு
இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியம் என்று
அறிந்து கொள்ளுங்கள். மோடியின் மாலைத்தீவு
பயணம் மாலைத்தீவுகளை இந்தியாவின் இன்னொரு பகுதியாக மாற்றியுள்ளது என்கிறார்கள் சர்வதேச மீடியாக்கள்.

மோடிஜியின் வெளிநாட்டுப் பயணம் அனைத்தும் இந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்திய வளர்ச்சியை நோக்கியே இருக்கும்.

இதை அறியாமல் உள்ளூர் டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு அவரைத் தூற்றுகிறான் திராவிட கட்சிகளால் குடிகாரன் ஆகிய தமிழன்.

ஜெய்ஹிந்த்.

பாரத் மாதாகி ஜெய்.