Tag Archives: Blogger

அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்

இன்று முதல், உங்கள் மாவட்டம் சிகப்பில் இருந்தாலும் சரி ஆரஞ்சில் இருந்தாலும்சரி…
கடைகள் திறந்தாலும் சரி திறக்கப்படவிட்டாலும் சரி…..
ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி தளராவிட்டாலும் சரி…..
ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி தடுக்காவிட்டாலும் சரி…
அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி…
மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி..

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை  காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது…
இது ஒரு Pandemic – உலகளாவிய கிருமி பரவல்.
நீண்ட காலம் இருக்கும், பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும். அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு மேட்டரே இல்லை என்ற நிலைக்கு வந்து  பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும். 
கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்.
லிஃப்டில் கூட்டம் இருந்தால், படிக்கட்டு வழியாக ஏறவும்/இறங்கவும்…
லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்….
பொதுவெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்….
அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்….
வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன்  இருக்கட்டும்…… 
கண்ணை கசக்குவது, மூக்கு நோண்டுவது, வாயில் சொரிவது,முகத்தில் கை வைப்பது போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்….. 
எச்சில் துப்பாதீர்கள்…..
கர்சீப் வைத்து தும்முங்கள்/இருமுங்கள்…
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்….
கும்பல் கூடுவதை தவிருங்கள்…….
முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்..
அலுவலகம்,வீடு,கடை என்று அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்…
ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி, பஸ்,ட்ரெயின் என்று பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்…
தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம். 
திருமணம், பர்த்டே பார்ட்டி, ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்… வாய்பிருந்தால்  தொலைவில் இருந்து மொய்/வாழ்த்து/அன்பளிப்பு அனுப்பலாம்.
பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும். அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும். 
முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க  மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்.. 
வழிபாட்டு தளங்களில் 3-6 மீட்டர் இடைவெளி விட்டு ஜாக்கிரதையாக செல்லவும்…
கிளினிக்/மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லாமல் செல்ல வேண்டாம்….
ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்….
வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி, நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி…அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.

உலகமே இந்தியாவோடும்,இந்திய அரசோடும் இருக்கிறது.ஆனால் உள்நாட்டு துரோகிகள்?

சுவிட்சர்லாந்த் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள மேட்டர்ஹார்ன் மலையில் 1000 மீட்டர் அளவு நமது இந்திய தேசியக்கொடியை முப்பரிமாணத்தில் காட்டியிருக்கிறார்கள்..

‘இந்தியா மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடு.அவர்கள் கொரோனாவை எதிர்த்து மிகப்பெரிய சவாலுடன் போராடி வருகிறார்கள்.இந்த நேரத்தில் அம்மக்களுக்கு நம்பிக்கையையும்,பலத்தையும் ஏற்படுத்தவும் நாமும் அவர்களோடு உள்ளோம் என்று உறுதி கூறும் விதமாகவும்’ இதை செய்து வெளிப்படுத்தியதாக கூறியிருக்கிறார்கள்..

உலகமே இந்தியாவோடும்,இந்திய அரசோடும் இருக்கிறது.ஆனால் உள்நாட்டு துரோகிகள் எங்கு வாலாட்டலாம் என தவித்து வருகிறது. https://m.economictimes.com/news/politics-and-nation/coronavirus-matterhorn-mountain-in-swiss-alps-lights-up-with-indian-flag-in-show-of-solidarity/articleshow/75217940.cms

#corona #coronavirus …ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை

ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை:
1. அனைத்து வேளாண் நடவடிக்கைகள் செயல்படலாம்
2. மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம்
3. 50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்
4. பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்
5. வங்கிகள் வழக்கமான நேரங்களில் சேவைகளை வழங்கலாம்,
6. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைனில் பாடம் நடத்தலாம்
7. நூறு நாள் வேலைத்திட்டங்களில் சமூக இடைவெளியுடன் பணிகளை தொடரலாம்
8. தபால் நிலையங்கள், பெட்ரோல்பங்க்குகள் உள்ளிட்டவை இயங்கும்
9. சாலை, ரயில், விமானங்கள் மூலம் அனைத்து சரக்கு போக்குவரத்தும் செயல்படும்
10. அனைத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள், லேப் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இயங்க அனுமதி
11.  ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படலாம்.
12. ஐடி சேவைகள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்
13. கிராம அளவிலான இ சேவை மையங்கள் இயங்க அனுமதி
14. கூரியர் சேவைகளுக்கு அனுமதி
15. ப்ளம்பர், எலெக்ட்ரிசியன், மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோருக்கு அனுமதி
16. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி. பணியாளர்களை அழைத்து வர நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்
17. கிராமப்புறங்களில் செங்கல் சூளைகளுக்கு அனுமதி
18. கட்டுமானத் தொழிலாளர்கள் பணி நடைபெறும் இடத்தில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதி.
19. 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்.
ஏப்ரல் 20க்கு பிற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
அதன்படி மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.
1. பேருந்து, ரயில், விமான சேவைகள் இயங்காது
2. அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது
3. மாநிலங்களுக்கிடையே, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
4.சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடாது
5. ஆட்டோ உள்ளிட்ட டாக்சி சேவைகள் இயங்கக்கூடாது
6. மால்கள், தியேட்டர்கள், ஜிம், நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா, பார்கள் , மண்டபங்கள் மூடப்பட வேண்டும்
7. விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது
8. வழிபாடு தலங்கள் அனைத்திலும் பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது
9. இறுதி சடங்கில் கலந்துகொள்ள 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது.

STAY HOMESTAY SAFE &SAVE THE SOCIETY

Keep your thoughts positive because your thoughts become your             
            😊WORDS
Keep your words positive because your words become your
            😊 BEHAVIOR
Keep your behavior positive because your behavior becomes your
           😊 HABITS
Keep your habits positive because your habits become your
              😊VALUES
Keep your values positive because your values become your
               😊DESTINY
Good night ☘️☘️A13 🌺🌺🌺🌺(14 th april) WISH YOU A ADVANCE HAPPY TAMIL NEW YEAR 💐💐💐💐💐STAY HOME
STAY SAFE &
SAVE THE SOCIETY

ஒருமித்த மனதுடன் #பிரார்த்தனை செய்து , ‘ #கொரோனா’ எனும் கொடிய #அரக்கனை அடியோடு அழிப்போம்

உலகம் தழுவிய #Medical_Association நடத்திய பெரும் விழாவில் தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில் தன் ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர்.  

             வழியில் பெரும் பனிப்புயல். ..!
அவரால் காரை ஓட்ட முடியவில்லை…
              கஷ்ட்டப்பட்டு  காரை செலுத்தி கொண்டிருந்த #டாக்டர் , ஒருவாறு  ஒரு கிராமத்தை தாண்டிய போது,  ஒரு இடத்தில்  சாலை , 
பல பிரிவுகளாக பிரிந்து காணப்பட்டது ..!
           வழிகாட்டி பலகையும் அந்த பனிப்புயலால்  தூர வீசப்பட்டிருக்கவே….
              டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியாமல் குழப்பம்!
             பின் ஒருவாறு  தெளிந்து , தாமாகவே ஒரு வழியை தேர்வு செய்து கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தவராய், தனக்கு தோன்றிய ஒரு வழியில்   காரை செலுத்த துவங்கினார் அவர் ! 
              ஆனால் , அந்த வழியோ ,  ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியாக இருந்தது! ..
               சோதனையாக,  இப்போது முன்பை விட  மிக அதிகமாக புயல்  வீசவே ….. 
          டாக்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை …!
 இரு பக்கமும் அடர்ந்த மரங்களாக இருந்ததால், ஒதுங்க எந்த இடமும் இல்லை.!
      கண்ணுக்கெட்டிய தூரம் வரை, ஒரு கட்டிடமோ, வீடோ   தென்படாத நிலையில், 
சிந்தனையுடன்  மெதுவாக கார் ஓட்டிக் கொண்டிருந்த டாக்டரின் கண்களில் ,                  சற்று தொலைவில் இருந்த ஒரு சிறு வீடு தென்பட ….. 
       உற்சாகத்துடன்  அந்த வீட்டை நோக்கி காரை செலுத்திய அவர், பின் ஒரு வழியாய் அந்த வீட்டை அடைந்து  .. பின், 
 காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு,    அந்த வீட்டின்   கதவை தட்டினார்…..!
.                      மறுகணம், ஒரு இளம் பெண் கதவை திறந்தாள்!!
             அவர் இருந்த நிலையை பார்த்து , உள்ளே அழைத்து  , அவரை அந்த சிறிய கூடத்தில் அமரச் சொல்லி விட்டு , பின் பரபரப்புடன் உள்ளே சென்றாள் அந்த இளம் பெண்….
              
                     மிக, மிக சிறிய அளவிலான வீடு!                
அங்கு  யாரும் இல்லாததால், …
   வீடு வெகு நிசப்தமாக இருந்தது!
             டாக்டர் அமர்ந்து கொண்டிருந்த அந்த நாற்காலியை தவிர , வேறு எந்த ஒரு பொருளும் அங்கு காணப்படவில்லை !
அந்த அளவுக்கு ஏழ்மை , அந்த வீட்டை ஆக்கிரமித்து கொண்டிருந்தது!
                     அந்த சிறிய கூடத்தின்  ஒரு ஓரத்தில், 
  குழந்தை ஒன்று தூளியில் தூங்கி கொண்டிருந்தது….! 
                      சற்றைக்கெல்லாம் அந்த பெண் ,   சூடான தேநீர் கோப்பையோடு வெளியே வந்தவள்,  அன்போடு அவருக்கு  அதை கொடுத்து அருந்த சொன்னாள்…..
           பின், பேச்சினூடே ,  அந்த பெண்,  அவர் தவறான பாதையில் வந்ததை புரிந்து கொண்டு, இன்னும் சிறிது தூரம் சென்றால் ஒரு பிரிவு வரும்….. 
அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், அவர்  செல்ல வேண்டிய ஊரின் பிரதான சாலை வரும் என்று விளக்கினாள் ….
         பின் ,  அவரை பார்த்து கனிவுடன் , 
  ” பனிப்புயல் குறையும் வரை ஓய்வெடுங்கள். ! நான் prayer செய்து விட்டு வருகிறேன் “
என்று  கூறிவிட்டு …. 
       அந்த சிறிய கூடத்தின் மறுபக்கத்தில் அமர்ந்து இறைவனை நோக்கி , கண்ணீர் மல்க முணுமுணுத்தவாறு , வெகு நேரம் பிரார்த்தித்து  விட்டு,  பின், அவருக்கெதிரே தரையில்  அமர்ந்து கொண்டாள்…
       ”  என்ன பிரார்த்தனை செய்தீர்கள்? ” 
 டாக்டர் அவளிடம் இயல்பாய் கேட்க ….
பதிலுக்கு அப்பெண் கண்ணீர் மல்க , 
தூளியில் தூங்கி கொண்டிருந்த தன் குழந்தையை காட்டி, 
       ”   அதோ தூளியில் தூங்கி கொண்டிருக்கிறானே, அவன்  என் மகன்!    அவனுக்கு வயது இரண்டு!  அவனுக்கு தலையில் ஒரு பெரும் பிரச்னை..! …Brain nerves சரியாக வேலை செய்யவில்லை….. ! 
இதை சரி செய்வதென்றால் , ஒரே ஒருவரால்தான் முடியுமாம்…… ! ஆனாலும் , அந்த சிகிச்சைக்கு ஏகப்பட்ட  பணம் செலவாகும் என்கிறார்கள்……!  என்னிடம் இப்போது அத்தனை பணம் கிடையாது…!   ஹூம்….இப்போது நானிருக்கும் இந்த  ஏழ்மை நிலையில் , கடவுளிடம் பிரார்த்திருப்பதை தவிர வேறு ஒன்றும் என்னால் செய்ய முடியவில்லை ‘” 
கண்ணீரை துடைத்தவாறு  தலையை குனிந்து கொண்டாள் அவள்……. .
அவளை பார்க்க பரிதாபமாகயிருந்தது  டாக்டருக்கு…
பின்  மெல்லிய குரலில்   அவளை பார்த்து , 
           ”   அம்மணி …யார் அந்த டாக்டர்? “
 இயல்பாக கேட்டார் அவர்…
            ”      புகழ் பெற்ற #Neurosurgeon #டாக்டர்_ஜான்சன்  ! ” 
அவள் பதிலை கேட்ட டாக்டர் அதிர்ந்து போய் , அவரையுமறியாமல், நாற்காலியிலிருந்து எழுந்து விட்டார். ….!
காரணம் , 
….அவர் தான் அந்த டாக்டர் #ஜான்சன்…..!!
                    அந்த ஏழை  பெண்ணின் ஆத்மார்த்தமான பிரார்த்தனையே , இறைவன் தன்னை அங்கே கொண்டு வந்து சேர்த்ததற்கு காரணம்  என்பதை நொடியில் உணர்ந்து கொண்டார் அவர்! ..
                பின் அங்கே நடந்தது தான் அதிசயமோ அதிசயம்! . …!
                  ஆம் …! 
உடனடியாக , அந்த பெண்ணையும், குழந்தையையும் தன் காரிலேயே  க்ளினிக்குக்கு அழைத்து சென்று ,  தகுந்த  மருத்துவம் செய்து , அந்த குழந்தையை காப்பாற்றினார் அந்த டாக்டர் ..!
            ஆக, 
 பிரார்த்தனை  மிக வலிமை         வாய்ந்தது. …!
        நேர்மையான எண்ணங்கள், பிரபஞ்சத்தில் கலந்து, அந்த செயல் செய்வதற்கான சூழ்நிலையையும், தகுதியான நபரையும் தேர்ந்தெடுத்து, அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும்….!
                நாம் அனைவரும் ஒன்றிணைந்து  , அவரவர் இருப்பிடத்திலிருந்தபடியே, ஒருமித்த மனதுடன் #பிரார்த்தனை செய்து , ‘ #கொரோனா ‘ எனும் கொடிய அரக்கனை அடியோடு அழிப்போம் !
கண்டிப்பாக கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! 
நல்லதே நடக்கும்!
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

#இந்திய #பொருளாதாரம் ஒரு சிறந்த முறையில் மீண்டும் வீறுகொண்டெழம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை #இரத்தன்_டாடா

TATA குழுமத்தின் முன்னாள் தலைவரும், கொடைவள்ளலும் ஆன_  *திரு.இரத்தன் டாடா அவர்களின்   கருத்துப்பதிவு* :
 “கொரனாவின் விளைவாக பொருளாதாரம் பெரும்  வீழ்ச்சி அடையும் என  நிபுணர்கள் கணிக்கிறார்கள்.  
எனக்கு  இ‌ந்த நிபுணர்களைப் பற்றி  அதிகம் தெரியாது.
ஆனால், மனித  உந்துதல்  மற்றும் மனஉறுதியான   முயற்சிகளின்  மதிப்பு பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதை நான் நன்கு அறிவேன்.
 *துறை வல்லுநர்களின் கணிப்புகளை நம்பியே ஆகவேண்டும் எனில்…*
இர‌ண்டாம் உலகப்போரு‌க்கு பின் முற்றிலும் அழிந்த ஜப்பானிற்கு  எதிர்காலமே கிடையாது.  ஆனால் அதே ஜப்பான் முப்பது  ஆண்டுகளில், அதற்கு காரணமான அமெரிக்காவையே ச‌ந்தை‌யி‌ல் கதறச் செய்தது.
அரேபியர்களால் உலக வரைபடத்திலிருந்தே காணாம‌ல் போயிருக்கவேண்டிய    இஸ்ரேலின் தற்போதைய நிலைமையே வேறு.
காற்றியக்கவியல் விதிகளின்படி பம்பல் வண்டுகளால் பறக்கவியலாது. ஆனால் இயற்பியல் பற்றி ஏதும் அறியாத அவ்வண்டுகள் பறக்கத்தானே செய்கிறது.
  அப்போதைய அணித்திறமைகளின் அடிப்படையில்,  
வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற
 கடைசி இடத்திற்கு கணிக்கப்பட்ட   நம் இந்திய அணி, 1983ல் உலக கோப்பையை வென்றது  சரித்திரம்.
உடல் பலவீனத்தினால், ஊன்றுகோல் இன்றி நடப்பதே கடினம் என கருதப்பட்ட வில்மா ருடால்ப்,  தடகளப்போட்டிகளில் நான்கு முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் அமெரிக்க பெண் சாதனையாளர்.
 கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு சாதாரண வாழ்க்கையே வாழ்வது கடினமென கருதப்பட்ட அருணிமா சின்ஹாதான் எவரெஸ்ட் சிகரம் ஏறினார்.
 இவற்றையெல்லாம் நோக்குகையில், 
கொரோனா நெருக்கடியும் வேறுபட்டதல்ல. *கொரோனாவின் கைகளை நாம் வீழ்த்துவோம்.  இந்திய பொருளாதாரம் ஒரு சிறந்த முறையில் மீண்டும்  வீறுகொண்டெழம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை*.
இரத்தன் டாடா.

“#கோபாலசாமி #துரைசாமி #நாயுடு…. #சுருக்கமாக….#ஜி.#டி.#நாயுடு…”

#நல்லதோர் #வீணை #செய்தே…!
இந்தியாவிலேயே,முதன் முறையாக,முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி,
“மின்மோட்டாரைத்” தயாரித்த மாநிலம்-தமிழ்நாடு.
தயாரிக்கப்பட்ட வருடம் 1937.
தயாரித்தது யார் தெரியுமா?
முறையான பள்ளிக் கல்வியைக் கூடத் தாண்டாத, ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன்.
அந்த சிறுவனின் 127வது பிறந்தநாள் கூட இன்று தான்.
நம்ப முடிகிறதா?
யார் அவர்? 
கோவை மாவட்டம் கலங்கல் என்ற கிராமத்தில், விவசாயி ஒருவருக்கு மகனாகப் பிறந்த அச்சிறுவனுக்கு,பள்ளிக் கல்வியின் மேல் நாட்டமில்லை,எனவே பள்ளியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டான்.
பள்ளிக் கல்வி தலையில் ஏறாமல் போகவே,ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.ஒரு நாள் அவ்வழியே வந்த பிரிட்டீஷ்காரரின்-மோட்டார் பைக் பழுதாகி ,நடுவழியில் நின்றுவிட்டது.
பைக் என்பதே அரிதலும்,அரிதான அக்காலகட்டத்தில், அதைப் பழுது பார்க்கும் நிபுணத்துவமும் குறைந்தே இருந்தது.நட்ட நடுவழியில் வெள்ளைக்காரர் திணறுவதைப் பார்த்து,அங்கு ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அச்சிறுவன் ஓடி வந்து-பைக் கை பிரித்து மேய்ந்து பழுது நீக்கி, அதை ஓடும் நிலையில் தயார் செய்து தந்தான்
அன்று தான்- அதுவரையிலும் அச்சிறுவன் மனதில் ,தீப்பொறியாய் இருந்த விஞ்ஞானத் தாகம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.உடனடியாக தன் கிராமத்தை விட்டு வெளியேறி-கோவையில் ஒரு உணவகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.
அதில் வந்த பணத்தைச் சேமித்து ஒரு மோட்டார் பைக் வாங்குவதே அவரது திட்டம்.பல மாத சேமிப்பில் அவரால் ஒரு மோட்டார் பைக்கை வாங்க முடிந்தது.வாங்கிய கையோடு அதை பகுதி பகுதியாகப் பிரித்து-அது பணி செய்யும் விதத்தை ஆராய்ந்து,பின் மீண்டும் ஒன்று சேர்த்தார்.அதன் பின் சின்ன சின்ன இயந்திரவியல் பணிகளைச் செய்யும் மிகச் சிறிய பொறியியல் பட்டறையை அமைத்தார்.அன்று தொடங்கிய அந்த பயணம் ,இந்திய அளவில் அறிவியல் துறையில் பல அசகாய சாதனைச் செய்தது.
யார் அவர் என புதிராக இருக்கிறதா?
மேலும் வாசியுங்கள்…
1945 இல் நடந்த சம்பவம்.
 
இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி அது.அக்கல்லூரியின் முதல்வர் கூட அவர்தான்.ஆனால் அவரோ பள்ளிப் படிப்பையேத் தாண்டாதவர்,ஆனாலும் தொழில்நுட்ப அறிவில் அவருக்கு நிகராக வேறு எவரும்  இல்லாத காரணத்தினால்,அவரையேப் அப்பதவியில் அமர்த்தியது அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம்.
பிரிட்டிஷ் அரசால்,தயாரிக்கப்பட்ட, அக்கல்லூரியின் பாடத்திட்டத்தை மறுஆய்வு செய்த அவர்,பொறியியல் படிப்புகளுக்கு நான்காண்டுகள் தேவையேயில்லை.அது மாணவர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும்,இரண்டாண்டுகள் போதும் என்று மாற்றத்தைக் கொண்டு வரப் பரிந்துரை செய்தார்.ஆனால் அதை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக் கொள்ளவில்லை.
உடனடியாக அக்கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக  இராசினாமா செய்தார்.
 
இதில் வேடிக்கையானே விஷயம் என்னவென்றால்,அவர் அளித்த நன்கொடைகளாலும்,அவரின் அயராத முயற்சியாலுமே தான் இந்தியாவின் முதல் பாலிடெக்னிக் கல்லூரியான அது,
கோயம்புத்தூரில் அமைந்தது.
அவர் நன்கொடை தந்து ,அவரால் உருவாக்கப்பட்ட ,அந்தக்  கல்லூரியின் முதல்வர் பதவியை தான் அவர் இராஜினாமா செய்தார்.
அந்தக் கல்லூரி தான், துவக்கத்தில் #ஆர்தர் #ஹோப் #கல்லூரி என்று பெயரிடப்பட்டு, பின்னாட்களில்,கோயம்புத்தூர் #அரசு #தொழில்நுட்பக் #கல்லூரி என்றானது.
இன்றைய  #Government #College #of #Technology -#GCT #Coimbatore.
 
புகைப்படக் கருவியான கேமராவைப் பார்த்தாலே ,அதை ஏதோ ஒரு துப்பாக்கியைப் பார்த்தது போல மக்கள் பதறி,புகைப்படம் எடுத்தாலே, ஆயுள் குறைந்து விடும் என்று திடமாக நம்பிய 1930 களின் காலகட்டத்தில்,  அதிலும் ஒரு தனி நபர் ஒருவர் கையில் கேமரா இருப்பதும்,அதை அவர் கையாள்வதும்–வானத்தில் பதினொன்று போட்டுக் காட்டும் சாகசத்திற்கு நிகராகப் பார்க்கப்பட்ட,அந்தக் காலகட்டத்திலேயே , அவரிடம் கேமரா இருந்தது.அதுவும் அவரே வடிவமைத்த கேமரா.அதைக் கொண்டு 1935 இல் இங்கிலாந்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்தபொழுது-அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை அப்படியேப் படம் பிடித்தார்.இங்கிலாந்திலேயே படம் பிடித்தவர்–இந்தியாவில் சும்மா இருப்பாரா?நேதாஜி,காந்தி,நேரு,காமராஜர்,
பசும்பொன் தேவர்,பெரியார்  என்று அவரின் கேமராவில் அகப்படாத பிரபலங்களே இல்லை. 
 
1937 இல் முதன் முதலில் இந்தியாவில்,உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட-முதல் எலக்ட்ரிக் மோட்டாரை தயாரித்தது அவருடைய UMS நிறுவனம் தான்.
 
1940 களிலேயே,ஒரு முழு வீட்டையும்,அஸ்திவாரம் தொடங்கி,முழுக் கட்டிடம் வரையில்-எட்டே மணிநேரத்தில் கட்டி முடித்துக் காட்டினர் அவர்.
 
1940 களிலேயே மிக மிக மெல்லிய பிளேடுகளைக் கொண்ட–தானியங்கி முகச்சவரக் கத்தியை வடிவமைத்தார். அது ஜெர்மனியில் பல பரிசுகளை வென்றது.
 
1952 இல் இரு நபர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில்,பெட்ரோலில் இயங்கும் காரை அவர் வடிவமைத்து தயாரித்தார்.ஆனால் அப்போதைய இந்திய அரசாங்கம் , அக்காருக்கு லைசென்ஸ் தர மறுத்து விட்டது.
 
பத்தடி உயரம் வளரும் ,பருத்திச் செடி, பலவகை சுவைகளைக் கொண்ட மாம்பழங்களைக் ,ஒரே கிளையில் தரும் மாமரம் என அவர் விவசாயத்திலும் பல புரட்சிகளைச் செய்து காட்டினர்.
இவையெல்லாம் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்பு எனும் கடலின் கரையில் எடுக்கப்பட்ட சிப்பிகள்…!
முறையான கல்வியறிவு ஏதுமின்றி-தன் சொந்த முயற்சியாலும்,கடின உழைப்பாலும் முன்னேறிய அவர் தான்,
கோவை அரசு மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்ட பொழுது,அதற்காக தனக்குச் சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியவரும்,
GCT எனப்படும்,கோவை பொறியியல் கல்லூரி அமைய பெரும் முயற்சியெடுத்து,நிதியுதவி செய்து,அதன் முதல் முதல்வருமாகவும் இருந்த,
கொங்கு மண்டலத்தின் தங்கம்,
“#கோபாலசாமி #துரைசாமி #நாயுடு…. #சுருக்கமாக….#ஜி.#டி.#நாயுடு…” 
கல்வி இல்லையே,பணமில்லையே,
வசதியில்லலையே,வாய்ப்புகள் இல்லையே…என்று இல்லைகளை பட்டியலிட்டு இயலாமையில் இருக்காமல்,
நாம் நிற்கும் அந்தப் புள்ளியிலிருந்து தான் ,உலகமே துவங்குகிறது.நாமே நமக்கு மூலதனம்.
புறக்கணிப்புகளையும் அவமானங்களையும், கண்டு நோகாமல்,அவற்றைச் சேர்த்து வைப்போம்,நம் வெற்றிவிழாவில் மற்றவர்கள் அதை பெருமையாக பேசுவார்கள்….! என்று நினைக்கத் தொடங்கினால்,
நம் வெற்றியைப் பதிவு செய்ய வரலாறு காத்திருக்கிறது….என்பதற்கு ஒரு பெரும் உதாரணமாக வாழ்ந்து காட்டிய அந்த மாமேதையின் 127 வது பிறந்தநாள் இன்று…!(நன்றி முனைவர் மணிநாதன் அவர்களுக்கு)

மக்களும் இந்த செய்தி சேனல்களை வச்ச கண் வாங்காமல் பார்ப்பதை நிறுத்திவிட்டு ✋, பீதியிலேயே வாழாமல் இயல்பாக இருக்க சற்று முயற்சி வேண்டும்

🌏 உலக மக்கள் தொகை சுமார் 700 கோடி
முதல் 16 நாடுகள்: 
1  சீனா  140 கோடி 
2  🇮🇳 133 கோடி
3  அமெரிக்கா 33 கோடி
4  இந்தோனேசியா 23 கோடி
5  பிரேசில் 21 கோடி
6  பாக்கிஸ்தான் 20 கோடி
7  வங்காளதேசம் 16 கோடி
8  நைஜீரியா 15 கோடி
9  உருசியா 14 கோடி
10  ஜப்பான் 12 கோடி
11  மெக்சிக்கோ 10 கோடி
12 எகிப்து 9 கோடி
13 பிலிப்பைன்ஸ் 9 கோடி
14 வியட்நாம் 8 கோடி
15  ஜெர்மன்  8 கோடி
16  எதியோப்பியா 7 கோடி
இன்றைய தேதியில் உலகில் கொரானா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் சுமார் 12-லட்சம் 
இது மொத்த உலக மக்கள் தொகையில் #0.17% சதவிகிதம் தான்
“ஒரு சதவிகிதம் கூட வரவில்லை”.
அதில் இறந்தவர்கள் 61-ஆயிரம்.
🌏 மொத்த மக்கள் தொகையில் #0.0009% சதவிகிதம் தான்
நோயிலிருந்து #மீண்டவர்கள் 2-லட்சத்திற்கும் மேல் 
அதாவது மாண்டவர்களை விட மீண்டவர்களின் எண்ணிக்கை #அதிகம்.
அதனால் மக்கள் தேவை இல்லாமல் பீதி அடைய வேண்டாம்.
நோய் வருவதற்கு முன், 
பயம் நம்மை கொன்று விடுப்போகிறது ..
வரலாறு காணாத நோய் தொற்று தான் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால்..
பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த ஊடகங்கள் தான், 
நாள் முழுக்க கொரனா செய்திகளை பரபரப்பாக தொடர்ந்து ஒளிபரப்பி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றது.
கெட்ட செய்தியை மட்டுமே சொல்வதைத் தவிர இவர்களுக்கு வேறெதுவும் தெரியாது. 
ஊடகங்களை அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும்
ஒரு நாளைக்கு 
காலையில் 30 நிமிடங்களும், 
மாலையில் 30 நிமிடங்களும் மட்டுமே செய்திகள் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும். 
மக்கள் நலன் கருதி அரசு இதை உடனே செய்திட வேண்டும். 
மக்களும் இந்த செய்தி சேனல்களை வச்ச கண் வாங்காமல் பார்ப்பதை நிறுத்திவிட்டு ✋, 
பீதியிலேயே வாழாமல் இயல்பாக இருக்க சற்று முயற்சி வேண்டும். 
9 நிமிடம் விளக்கை அனைப்பதற்கு பதில், 
ஒரு 9 நாட்களுக்கு டீ.வியை அனைத்து வைப்பது நன்று.